இந்தியாதமிழகம்

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாடு அரசு நிதி கோருவது ஏன்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலின் ஒரு பகுதி..

இயற்­கைப் பேரி­டர்­க­ளால் ஏற்­ப­டும் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக ஒவ்­வொரு மாநிலத்­திற்­கும் மாநில பேரி­டர் நிவா­ரண நிதி (SDRF) என்ற நிதி உள்­ளது. எந்­தெந்த மாநிலத்­திற்கு இந்த நிதி எவ்­வ­ளவு என்­பதை ஐந்­தாண்டு காலத்­திற்கு ஒரு­முறை ஒன்­றிய அர­சால் நிய­மிக்­கப்ப­டும் நிதிக்குழு (Finance Commission) தீர்­மா­னிக்­கி­றது. இதன்படி, தமிழ்­நாட்­டி­னு­டைய மாநில பேரி­டர் நிவா­ரண நிதிக்கு (SDRF)  ஒவ்­வொரு ஆண்­டும் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி 1,200 கோடிரூபாய் ஆகும்.

இதில் 75 விழுக்­காட்டை, அதா­வது 900 கோடி ரூபாயை ஒன்­றிய அரசு தர­வேண்­டும். 25 விழுக்­காட்டை, அதா­வது 300 கோடி ரூபாயை தமிழ்­நாடு அரசு ஏற்­றி­ட­வேண்­டும். ஒன்­றிய அர­சின் பங்­கா­னது ஆண்­டு­தோ­றும் இரு தவ­ணை­க­ளில் நமக்கு அளிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்­கப்­ப­டும். ஒரு இயற்­கைப் பேரி­ட­ரின் தாக்­கம் மிகக் கடு­மை­யாக இருக்­கும்­போது இந்த மாநில பேரி­டர் நிவா­ரண நிதி (SDRF) போத­வில்லை என்­றால், அந்த இயற்­கைப் பேரி­ட­ரைக் கடும் இயற்­கைப் பேரி­ட­ராக அறி­வித்து தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து (NDRF) கூடு­தல் நிதி ஒதுக்­கப்­ப­டும்.

சென்­னை­யில் ஏற்­பட்ட பெரு­வெள்­ளத்­தை­யும், தற்­போது தென் மாவட்­டங்­க­ளில் ஏற்பட்­டுள்ள வர­லாறு காணாத வெள்­ளத்­தை­யும், இவ்­வாறு கடும் பேரி­டர்­க­ளாக அறிவித்து தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து (NDRF) கூடு­தல் நிதி ஒதுக்­கிட வேண்­டும் என்­று­தான் நாங்­கள் பல­முறை கோரிக்கை வைத்­துள்­ளோம். இதைத்­தான் பிர­த­மர் அவர்­களை நேரில் சந்­தித்­த ­போ­து நானும் வலி­யு­றுத்தி குறிப்­பிட்­டிருக்­கி­றேன். மனு­வா­க­வும் கொடுத்­தி­ருக்­கி­றேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரி­டர்­க­ளாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து (NDRF) இது­வரை நமக்கு கூடு­தல் நிதி எது­வும் ஒதுக்­கீடு செய்­யப்­ப­ட­வில்லை. ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்­பது இந்த ஆண்டு நமது மாநில பேரி­டர் நிவா­ரண நிதிக்கு (SDRF) ஒன்றிய அரசு அளிக்க வேண்­டிய இரண்­டா­வது தவணைதானே தவிர, கூடு­தல் நிதி அல்ல.

சவா­லான நிதி­நி­லைச் சூழல் இருக்­கும் போதி­லும், ஒன்­றிய அரசு இந்­தக் கூடு­தல் நிதி தராத போதி­லும், மக்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு மாநில அரசு நிதி­யைச் செல­விட்டு நிவா­ர­ணப் பணி­களை மேற்­கொண்டு வரு­கின்­றோம். சென்­னை­யில் நிவாரண உத­விக்­கும் மீட்­புப் பணி­க­ளுக்­கும் 1500 கோடி ரூபாய்க்­குக் கூடு­த­லாக செலவி­டப்­பட்­டுள்­ளது. நான் இன்று இங்கு அறி­வித்­துள்ள நிவா­ரண உத­வி­க­ளுக்­கும், பணி­க­ளுக்­கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செல­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றது. இது­மட்­டு­மின்றி, சேதமடைந்­துள்ள சாலை­கள், பாலங்­கள், குடி­நீர்த் திட்­டங்­கள், மருத்­து­வ­ம­னை­கள், பல்­வேறு கட்­ட­டங்­கள் போன்­ற­வற்றை சீர­மைப்­ப­தற்­கும் பெரும் நிதி தேவைப்­ப­டும்.

எனவே, பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கும் அதே நேரத்­தில், இந்த வெள்­ளத்­தால் சேத­ம­டைந்­துள்ள பல்­வேறு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை குறிப்­பாக சாலை­கள், மருத்­து­வ­ ம­னை­கள், பாலங்­கள், மின்­கட்­ட­மைப்­பு­கள் ஆகி­ய­வற்றை சீர்செய்யும் பணிக்­காக தமிழ்­நாடு அரசு உட­னடி முன்­ப­ண­மாக மாநில பேரி­டர் மேலாண்மை நிதி­யி­ல் இ­ருந்து 250 கோடி ரூபாயை விடு­விக்க ஆணை­யிட்­டுள்­ளேன். அதோடு மேலும் தாம­த­மின்றி இந்த இரண்டு பேரி­டர்­க­ளை­யும் கடும் பேரி­டர்­க­ளாக அறி­வித்து தேசிய பேரி­டர் நிவா­ரண நிதி­யி­லி­ருந்து (NDRF) கோரப்­பட்­டுள்ள நிதியை ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்று தமிழ்­நாட்­டின் சார்­பி­லும் தமிழ்­நாட்டு மக்­க­ளின் சார்பிலும் நான் மீண்­டும் மீண்­டும் கேட்­டுக் கொள்­கி­றேன்.

நெல்லையில் 21-12-2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button