தோழர் என்.சங்கரய்யா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரமும் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான மதிப்பிற்குரிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள், உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
102 வயதான போதும், நல்ல நினைவாற்றல், கம்பீர குரல் இருப்பது மட்டுமல்ல, எந்நாளும் மக்கள் நலன் குறித்தே கவலைப்படும் மதிப்புமிக்க தலைவராவார்.
பொது வாழ்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக விளங்கும் தோழர் என்.சங்கரய்யா விரைவில் பரிபூரண குணமடைந்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி