Solar Power: சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் சாதனை
சென்னை: புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம், சோலார் மின் உற்பத்தியில் நிர்ணயிக்கபப்ட்ட இலக்கை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறையின் முன்முயற்சிகளின் காரணமாக நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தியை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக, புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்திலும் சூரிய மின் சக்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது சென்னையின் செண்ட்ரல் நிலையம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவீத மின் ஆற்றல் தேவை தயாரிக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது என்பதை ரயில்வே இணையமைச்சர் அஷ்வினி வைஷ்ணா தெரிவித்துள்ளார்.