அறிக்கைகள்

பி.சீனிவாசராவ் அவர்களின் மகன் பி.எஸ்.ராஜசேகரன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஇரங்கல்

தியாக சீலர் பி.சீனிவாசராவ் அவர்களின் மகன் பி.எஸ்.ராஜசேகரன் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு அமைப்பின் ஆரம்ப காலத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான பி.சீனிவாசராவ் அவர்களின் மகன் எஸ்.ராஜசேகரன் (வயது 69) இன்று (17.03.2025) காலை சென்னையில், மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் அமைக்க முன்முயற்சி எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தியாக சீலர் பி.சீனிவாசராவ் – நாச்சாரம்மாள் தம்பதியரின் மகன் எஸ்.ராஜசேகரன், புரசைவாக்கம் பகுதியில் கேபிள் டிவி தொழில் நடத்தி வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இன்று (17.03.2025) காலை மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார் என்பது பெரும் துயரமாகும்.

காலமான எஸ்.ராஜசேகருக்கு, பிரேமலதா, சுமதி என திருமணமான இரண்டு சகோதரிகளும், வாழ்விணையர் பொன்னி, மகள் மிருதுளா சிந்து, மகன் அமிர்ரூத் ஆகியோரும் இருக்கிறார்கள்.

சென்னை பெருநகர், 913ஏ, -ஜெ பிளாக், 19-வது தெரு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை 18.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இறுதி நிகழ்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button