இ-பேப்பர்

Js_34issue_Nov.28 – Dec.04

Js_34issue_Nov.28 – Dec.04_Page1

Js_34issue_Nov.28 – Dec.04_Page1
நெற்பயிர் பாதிப்பு நிவாரண நிதியை உயர்த்தி வழங்குக

நெற்பயிர் பாதிப்பு நிவாரண நிதியை உயர்த்தி வழங்குக

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தஞ்சாவூரில், மாநில செயற்குழு உறுப்பினர் கோ. பழனிசாமி எக்ஸ்.எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் மாநில செயற் குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி, க.சந் தானம், பொருளாளர் எம். ஆறுமுகம், முன் னாள் எம்பி. பொ.லிங்கம், சட்டமன்ற உறுப் பினர் தி.ராமச்சந்திரன் (தளி), முன்னாள் எம்எல் ஏக்கள் வை.சிவபுண்ணியம், தி.ராமசாமி, எஸ்.குணசேகரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசு கேட்டுள்ள நிவாரணநிதியை உடனே வழங்கு

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடு மையான பாதிப்புகளும், சேதாரங்களும் ஏற் பட்டுள்ளன. வடகிழக்கு பருவ கால இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணப் பணிகளையும் முனைப்போடு மேற்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்கான நிவாரணம் வழங்கவும், நிரந்தர கட்டமைப்புகளை உருவாக்கவும் ஒன் றிய அரசு ரூ.6 ஆயிரத்து, 629 கோடி முதல் கட்ட நிதியாக வழங்க வேண்டும் என கேட் டுள்ளது. கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்துள்ளார். வெள்ள நிவாரணப் பணிக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள முதல்கட்ட நிதியை முழுமையாக ஒன்றிய அரசு  விரைந்து வழங்குவதுடன் மத்தியக் குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

நிவாரண நிதியை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்குக

வடகிழக்கு பருவமழை இயல்பான அள வைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் பெய் ததாலும், வங்கக் கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக பெய்த தொடர் கனமழையாலும், தமிழ்நாட்டின் பெரும் பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காவிரி பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி சம்பா பயிர்கள் விளைந்து அறுவடை நடந்து கொண்டிருந்த நேரத்தில் கனமழை பெய்ததால், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துவிட்டது. இதேபோல் அறு வடை முடிந்து, நடந்த சாகுபடியில் நடவு செய்யப்பட்ட தாளடி பயிர்கள் வேர்பிடிக்கும் முன்பே நீரில் மூழ்கியதால், பயிரின் வேர்கள் முற்றிலுமாக அழுகிபோய்விட்டன. மானாவரி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் அழிந்துள்ளன.

இதே காலகட்டத்தில் விவசாய வேலை களை இழந்து நிற்கும் விவசாயத் தொழிலா ளர்கள் உணவுக்கும் வழியற்ற துயர நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர் களது குடிசை வீடுகளும், அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளும் கால முதிர்ச்சியால் பழுதடைந்து, மழையால் தொடர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து நிற்கின்றன. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் நெற்பயிர் மூழ்கி அழிந்து போன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசிடம் கோரப்பட்டது. ஆனால் அரசு விளைந்த பயிர் இழப்புகளுக்கு ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என நிவாரணம் அறிவித்திருக்கிறது. இது ஏக்கருக்கு கணக்கிட்டால் ரூ.8 ஆயிரத்து 163 மட்டும்தான். இந்த நிவாரணம் இழப்பை ஈடுகட்ட போதுமானதல்ல. மேலும் தாளடி சாகுபடி பயிர்கள் வேர் பிடிக்காத நிலையிலேயே அழிந்துவிட்ட நிலையில் எக்டேருக்கு ரூ.6 ஆயிரத்து 83 மதிப்புக்கு இடுபொருள் வழங்குவதும் விவசாயிகளுக்கு உதவாது. விவசாயத்தின் உயர்நாடியான விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்த்துக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பண உதவியும், இடிந்து விழுந்தது விட்ட தொகுப்பு வீடுகளையும், குடிசை வீடுகளையும் புதிப்பித்து, புதிதாக கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கைப் பற்றி நிவாரண அறிவிப்பில் ஏதும் கூறாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அரசு அறிவித்துள்ள மழைக்கால நிவா ரணம் குறித்து  தமிழ்நாடு அரசின் அமைச் சரவைக் கூட்டம் மறுபரிசீலனை செய்து, கதிர்கள் முற்றிய நிலையிலும், பயிர்கள் நடவு செய்த நிலையிலும் பெரும்  இழப்புகளுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதமும், விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பண உதவியும் வழங்க வலியு றுத்துவதுடன் வசிக்க முடியாத நிலைக்கு சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளையும், குடிசை வீடுகளையும் புதுப்பித்துக் கட்டித் தர வேண்டும்.

நடேஷ.தமிழார்வன் படுகொலை தொடர்பாக...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாள ருமான நடேச.தமிழார்வன் நீடா மங்கலம் கடைத்தெருவில், பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொல் லப்பட்டார். அடர்த்தியாக மக்கள் நடமாட்டம் இருந்த நேரத்தில் நடந்த படுகொலை சம்பவம் திரு வாரூர் மாவட்டத்திலும், சுற்று வட் டாரத்திலும் பேரதிர்ச்சி ஏற்படுத்தி யுள்ளது. இச் சம்வத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் இக் குற்றச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதிகாரர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு சட் டப்படி தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பாக கஞ்சா கடத்தலுக்கு இசைவாக இருந்து வந்த காவல் ஆய்வாளர் உட்பட இதில் தொடர் புடைய அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான முறையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

Js_34issue_Nov.28 – Dec.04_Page 2

Js_34issue_Nov.28 – Dec.04_Page 2
கட்சிக் கடிதம்: பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 10

கட்சிக் கடிதம்: பாசறை நோக்கி படைகள் திரும்பட்டும்! - 10

பேரன்புமிக்க தோழர்களே!

இராணுவம் பாசறை நோக்கி செல்வது போன்று, இராணுவத்தையொத்த நமக்கு எது பாசறை?

நாம் நடத்திட்ட, நடத்தவிருகின்ற கிளை, இடைநிலை, வார்டு, நகர, மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடுகள் தான் நமக்கு பாசறையாகும்.

நமது மாநாடுகளில் அரசியல் அறிக்கை, வேலை அறிக்கை, அமைப்பு நிலை அறிக்கை என்ற மூன்று அறிக் கைகள் முன்வைக்கப்பட்டு, விவாதித்து, செழுமைப் படுத்தி அங்கீகரிக்கப்படும்.

நமது கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, மாநிலக்குழு அரசியல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.

நாம் விவாதிக்க  உள்ள வேலை அறிக்கை என்பது நாம் சென்ற மாநாட்டிற்குப் பின்னர் மேற்கொண்ட போரை பரிசீலிப்பதாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பல மகத் தான போர்களை நடத்தி உள்ளோம் என்பதனை நாம் மட்டுமல்ல, நாடு நன்கறியும்.

வகுப்புவாத சக்திகளை நேருக்கு நேர் எதிர் கொள் ளும் ஆற்றலும், வல்லமையும் நமக்கு உண்டு  என்பதனை நம்மை விட நமது எதிரிகள் நன்கறிவார்கள்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை & நிரந்தர எதிரிகளும் இல்லை என்று கூறி, தாங்கள் செய்த அரசி யல் தவற்றை நியாயப்படுத்தி பேசுபவர்கள் உண்டு.

இக்கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க வில்லை; நிராகரிக்கின்றது. ஆம் நமக்கு நிரந்தரமான எதிரி உண்டு & அத்தகைய எதிரி என்பது யார்? என்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தபோதும் மீண்டும் பகிரங்கமாக தெரிவிக்கின்றோம். எங்களின் முதலாவதும், முடிவானதுமான அரசியல் எதிரி வகுப்புவாத மே!

வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை & நேற்றும் இல்லை இன்றும் இல்லை & ஏன் நாளையும் இல்லை. வகுப்புவாதம் எங்களின் பரம எதிரி, நிரந்தர எதிரி. நமக்கு மட்டுமல்ல நாட்டிற்கும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானதாகும்.

இத்தகைய வகுப்புவாத எதிரிகளை எதிர்த்து களம் காண நாம் தனித்தும் ஒன்றுபட்டும் களம் கண்டி ருக்கின்றோம்.

வகுப்புவாத பேராபத்தை தோற்கடிக்க இடதுசாரி சக்திகளை, வகுப்பு வாதத்திற்கு எதிரான மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடையோரை ஒன்றிணைப்பதில் நமது கட்சி மகத்தான பங்களிப்பை செய்து வெற்றி கண்டது என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.

“நாட்டை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்“ என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பிரச்சார பேரி யக்கம், நிறைவாக திருப்பூரில் பொதுக்கூட்டம், கோவை மாநகரில் மாநாடு, தமிழகமே திரண்டு வந்து பங்கேற்றது.

மதுரை மாநகரில் மாநாடு & இம்மாநாடுகளில் நமது மதிப்புமிக்க தலைவர்கள் பொதுச் செயலாளர் டி.ராஜா, இரா. நல்லகண்ணு, தா.பாண்டியன் மட்டுமல்லாது திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் மற்றும் நமது தோழமை கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

இம் மாநாடுகளில் வகுப்பு வாதத்திற்கு எதிரான வர லாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள், உண்ணா விரதம், இரயில் மறியல்,  வேலைநிறுத்தம், கடையடைப்பு என பல்வேறு வடிவங்களில் தொடர் இயக்கங்களை மேற்கொண்டோம்.

ஜனநாயக முறையில் அமைதி வழியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கு பெற்ற நமது தோழர்கள் மீது இன்றும் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன.

இவைகள் குறித்து எல்லாம் நமது மாநாடுகளில் விரி வாக விவாதிக்க வேண்டும். இயக்கங்களின் மூலம் நாம் பெற்ற வெற்றிகளை சாதனைகளை  கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் நம்மிடம் உள்ள தெரிந்தோ அல் லது நம்மை அறியாமலோ உள்ள குறைபாடுகளை,  பலவீனங்களை ஒளிவு மறைவின்றி நாம் பரிசீலித்து அத்தகைய பலவீனங்கள் வருங்காலத்தில் ஏற்படாம லிருக்க நல்லதொரு முடிவுகளை தயக்கமின்றி நாம் மேற்கொள்வதன் மூலம் நம்மை பலப்படுத்திக் கொள்ள முடியும்.

இவை மட்டுமின்றி நமது பாசறைகளை (மாநாடுகள்) நாம் மிக ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திட வேண்டும்.

நாம் படைத் தளபதிகளாக பணியாற்றி வருகின்றோம். ஆம் நிச்சயமாக நமது கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆற்றல்மிக்க தளபதிகள் ஆவர்.

தளபதியாய் மிளிரும் நம்மை மேலும் பேராற்றல் மிக்கவர்களாக வளர்த்து வர வேண்டும்.

ஒவ்வொரு கட்சி உறுப்பினரின்  வளர்ச்சி என்பது அவர்களுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமல்ல.

கட்சி உறுப்பினர்களின் அரசியல் வளர்ச்சி என்பது, ஒட்டுமொத்த கட்சி யின் வளர்ச்சியாகும். கட்சியின் வளர்ச்சி என்பது சமூக மாற்றத்திற்கான வளர்ச் சியாகும்.

சமூகம் ஒட்டுமொத்தமாக அடிப்படையிலேயே மாற்றி அமைக்கப்பட வேண் டும்.

அத்தகைய மாற்றம் தான், ஏற்றத் தாழ்வற்ற பொதுவுடைமைச் சமுதா யத்தை படைத்திட வழிவகை செய்யும்.

பொதுவுடைமை சமுதாயத்தில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கை என்பது பிறர் மதிக்க தக்க வாழ்வாக அமைய முடியும்.

உலகில் மின்சாரமின்றியும், மார்க்ஸ் இன்றியும் எந்த ஒரு தேசமும் இருக்க இயலாது என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை எவரும் எளிதில் நிராகரிக்க இயலாது.

“புதியதோர் உலகம் செய்வோம் - & கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்“

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்கியதை மீண்டும், மீண்டும் முழங்குவோம்.

“கொலை வாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே”

என புரட்சிக் கவிஞரின் ஆவேச முழக்கத்தை வழி மொழிவோம்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி&

ஆனால் நமது நாட்டுக் குடிமக்களில் இருபது கோடி பேர் இரவு உணவின்றி படுத்துறங்கும் படுபாதகச் செயலை என்னவென்று கூறுவது?

விலைவாசிகள், அத்தியாவசிய பண்டங்கள் உட்பட அனைத்தும் விண்ணை முட்டும் அளவிற்கு நாள்தோறும் இறக்கை கட்டி பறந்து உயர்ந்து செல்வது குறித்து கவ லைப்பட வேண்டிய ஆட்சியாளர்கள் அமைதி காக் கின்றனர்.

அனைத்திற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன சாமியாராக மோடி திகழ்கின்றார்.

நாடாளுமன்றத்தில் பேச மாட்டார், பத்திரிகையா ளர்களை சந்திக்க மாட்டார்&

மாதந்தோறும் மனதின் குரல் என்ற பெயரால் யாரும் இல்லாத அறையில் அமர்ந்து வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மனசாட்சியின்றி உரையாற்றுவார்.

நாட்டில் நிலமற்ற, விவசாயத் தொழில் ஒன்றையே நம்பியுள்ள ஏறத்தாழ 21 கோடி விவசாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை நம்பியுள்ளனர். இவ்வேலையின் மூலமாக குறைந்த ஊதியத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இத்திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு (ஒன்று) அமல்படுத்திய போது திட்டத்தை செயல்படுத்திட  நிதி ஒரு பிரச்சனை அல்ல என்று குறிப்பிட்டார்.

ஆனால், இன்றைய அரசு ஆண்டு தோறும் திட்டத்திற்கான நிதியை குறைத்து ஏழை விவசாயத் தொழிலா ளர்களின் வயிற்றில் அடிக்கின்றது.

சென்ற ஆண்டு 138 ஆயிரம் கோடி ஒதுக்கிய அரசு, இவ்வாண்டு ரூ.75,000 கோடி மட்டுமே ஒதுக்கி யுள்ளது என்று, புலவர் உதயை மு. வீரையன் அவர்கள் 19.10.2021 ஆம் தேதியிட்ட தினமணி நடுப்பக்க கட் டுரையில் குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நரேந்திர மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு யாருக்கான அரசு & எம் மக்களுக்கான அரசு என் பதனை புரிந்து கொள்ள முடியும்.

பெரும் முதலாளிமார்களுக்கு லாபம் & கொள்ளை லாபம், மேலும் லாபம், மேலும்  கொள்ளை பகல் கொள்ளை, சட்டப்பூர்வமான கொள்ளை என்ற கொள்கையைப் பின் பற்றி, ஏழை எளிய மக்களுக்கு எதிரான, பகிரங்க பச்சை துரோ கங்களை நாள்தோறும் மேற்கொள் ளும் மோடி அரசை இனியும் நாம் அனுமதிக்க போகின்றோமா?

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வஞ்சக மோடி அரசை அகற்றிட வேண்டாமா?

உழைப்பாளி மக்களின், உயிரைப் பறிக்கும் படுபாதக அரசை தூக்கி எறிய வேண்டாமா?

வெகு மக்களை அணிதிரட்டி ஆர்ப்பரித்து போர்க் களம் காண வேண்டாமா?

அதற்கு நாம் பாசறையில் உரிய திட்டம் வகுத்திட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த வாரம் சந்திப்போம். வணக்கம்.

தோழமைமிக்க

இரா.முத்தரசன்

Js_34issue_Nov.28 – Dec.04_Page 3

Js_34issue_Nov.28 – Dec.04_Page 3
இயக்கம்

இயக்கம்

தத்துவார்த்தம் - 6, எஸ். தோதாத்ரி

 

இயக்கம் என்பது மாறுதலைக் குறிக்கும் சொல். அசையும் பொருள் என்று நமது இலக்கியங்கள் இதை குறிப்பிடுகின்றன. மிகச் சிறு துகள் தொடங்கி, பெரிய கிரகங்கள் வரை எல்லாமே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவை இயக்கத்தை நிறுத்தி விட்டால் எதுவுமே இருக்காது. ஆனால் அந்த நிலை ஏற்படாது. ஏனென்றால் இயக்கமே பொருள்களின் உயிர் மூச்சாகும்.

இந்த இயக்கத்தை நான்காக பிரிப்பர் 1) பௌதீக இயக்கம், 2) இராசாயன இயக்கம், 3) உயிரியல் இயக்கம், 4) சமுதாய இயக்கம்.

பௌதிக அல்லது இயற்பியல் இயக்கம் என்பது பொருள்களின் வேகம், சுழற்றி, இடப்பெயர்ச்சி, வியாபகம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது.

ரசாயன இயக்கம் (வேதியியல்) பொருட்களின் அமைப்பு, அதில் ஏற்படும் மாறுதல் ஆகியன பற்றிக் கூறுகிறது. ஒரு அணுவின் பகுதி மற் றொரு அணுவுடன் இணைந்து வேறு ஒரு பொருளாக மாறுவதைக் குறிக் கிறது. உதாரணமாக ஹைட்ரஜன் ஆக்ஸிஜனுடன் இணைந்து தண் ணீர் உருவாகிறது. இவை பண்பு களை இழந்து புதிய பண்புள்ள பொருள்களாக மாறுகிறது. இதன் காரணமாக உலகில் பல பொருள்கள் உருவாகின்றன.

உயிரியல் இயக்கம் என்பது உயிர்ப் பொருள்களில் ஏற்படும் மாற் றங்கள் பற்றியது. நமது உடலில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை உயிர்த் தன்மை உள்ளவை. இதேபோன்று எல்லா விலங்குகளிலும் பல்வேறு மாறுதல்கள் இடம்பெறுகின்றன. தாவரங்களும் மாறுகின்றன. உயிரிகள் தோன்றி வளர்ந்து மறைவதே உயிரியல் இயக்கம் ஆகும். பொருள்களின் பரிணாமம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சமுதாய இயக்கம் என்பது இதில் சற்று சிக்கலானது. மற்ற இயக் கங்களை ஆராய்வது போல இதனை எளிதில் ஆராய முடியாது. ஏனென் றால் இது மனிதர்களால் கட்டமைக் கப்பட்டுள்ளது. விலங்குகளிடை யேயும் ஒருவகை அமைப்பு உண்டு. ஆனால் அது இயல்பூக்கம் சார்ந்தது. சமுதாய இயக்கம் அத்தகையது அல்ல. அது உணர்வு பூர்வமானது.

மார்க்சியம் சமுதாய இயக்கமானது விதிகளுக்கு உட்பட்டது என்று கூறு கிறது. பல்வேறு அமைப்புகள் சமுதாயத்தில் உள்ளன. இவற்றிற்கு அடிப்படையான ஒன்றாக மார்க்சியம் வர்க்க அமைப்பை முன்வைக்கிறது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறே சமூக வரலாறு என்று

கூறு கிறது.

பிற தத்துவங்களில் சமுதாய இயக்கம் பற்றி எதுவும் கூறவில்லை. ஏனென்றால் அவற்றைப் பொருத்த மட்டிலும் சமூகம் என்ற  பொருளே கிடை யாது. அவை சமூகத்தை கணக் கில் எடுத்துக் கொள்வதே இல்லை.

இந்த இயக்கங்கள் பற்றி கூறும் போது பேரா.நா.வானமாமலை அவர் கள் ஒரு கூடுதல் விளக்கம் தருகிறார். இயக்கங்களை அவர் இரு வகை யாகப் பிரிக்கிறார். ஒன்று தாழ் நிலை இயக்கம். மற்றொன்று உயர் கட்ட இயக்கம். நாம் கண்ணாடி முன்னால் அமர்ந்திருக்கிறோம். அது நமது உரு வத்தை பிரதிபலிக்கிறது. இது தவிர வேறு எதையும் செய்யவில்லை. இது இயந்திர கதியிலான இயக்கம் ஆகும். இதேபோல செயற்கை மூளையும், கணினியும் செயல்படுகின்றன. நாம் கொடுத்த தகவல்களை அவை வரிசைப்படுத்தி நமக்கு தருகின்றன. தானியக்க இயந்திரங்களும் அவ் வாறே உள்ளன. இதனையும் நமது மூளை  செயல்படுவதையும் ஒரே தராசில் வைத்து காணக்கூடாது. மூளையின் இயக்கம் உயர் கட்ட இயக்கம். பல மில்லியன்  கணக்கான பரிணாம வளர்ச்சியின் விளைவு நமது மூளை. அதன் இயக்கத்தில் உயிரியல் தன்மையும் உள்ளன. சமூகத்தின் தாக்கமும் உள்ளது. எனவே அதனை இயந்திரங்களின் இயக்கத்துடன் இணைந்துக் காணக் கூடாது. அவ்வாறு கண்டால் அது இயந்திரகதியிலான அணுகுமுறை யாகத் தான் இருக்கும். அது இயங்கியல் அணுகுமுறையாக இருக்காது. இந்த வேறுபாடுகளை மனதில் கொண்டே நாம் இயக்கத்தினை காண வேண் டும். இல்லாவிடில் பல தவறான முடிவு களுக்கு நாம் வர நேரிடும்.

இவ்வாறு இயக்கம் பற்றி கூறும் போது மார்க்சியத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்பார்கள் சில அதிமேதாவிகள். மார்க்ஸ் இவற்றை கூறவில்லை என்று கூறுவார்கள். ஏங்கல்ஸ் தான் கூறியுள்ளார் என் பார்கள். ஆயிரம் தடவை சத்தியம் செய்து எங்கல்சும் & மார்க்சும் இணைந்துதான் மார்க்சியத்தை உரு வாக்கினார்கள் என்பதை மறுப் பார்கள். காரணம், மார்க்சியத்தை எப்படியாவது குழப்ப வேண்டும் என் பதுதான் இவர்கள் நோக்கம். இருப் பினும் இந்த இயக்கம் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களை ஏங்கல்ஸ் இரு நூல்களில் அளித்துள்ளார். 1) டூரிங்குக்கு மறுப்பு, 2) இயற்கையின் இயங்கியல் ஆகியனவாகும்.

தொடர்புக்கு: 98947 83657

 

 

 

Js_34issue_Nov.28 – Dec.04_Page 4

Js_34issue_Nov.28 – Dec.04_Page 4
ஏர்க்கலப்பைப் புரட்சி

ஏர்க்கலப்பைப் புரட்சி

தடுக்க ஆள் இல்லை என திமிராக ஊர் பயிரை மேய்ந்த காளையை கொம்பைப் பிடித்து அடக்கி இருக்கிறார்கள், இந்திய விவசாயிகள்! 750 க்கு மேற்பட்டவர்கள் களத்திலேயே செத்து, இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் செத்துவிடவில்லை என்று மெய்ப்பித்திருக்கிறார்கள்.

கடும் குளிரிலும், சுடும்வெயிலிலும், சுழன்றடித்த மழையிலும், கொலைகாரக் கொரானாவிலும் நிலைகுலையாமல் மலைபோல் நின்று போராடிய விவசாயிகளைப் பார்த்து இவர்கள் போராட்டம் நடத்திப் பிழைப்பவர்கள் (அந்தோலன் ஜீவிகள்) என்று பிரதமர் மோடி நக்கல் செய்தார்.

பதினோரு தடவை பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தங்க ளுக்கு நேரவிருக்கும் அபாயத்தைப் பலமுறை விவசாயிகளின் பிரதிநிதிகள் விளக்கிச் சொன்னார்கள். ஆனால் விவசாயிகளால், இந்த சட்டத்தில் ஒரு தவறைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை என்றார் மோடி. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநில இடைத்தேர்தல் தோல்விகளால் மக்கள் காதோடு சேர்த்து கொடுத்த அறை பாஜகவுக்கு இப்போது கேட்கும் திறனைத் தந்திருக்கிறது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக வாக்களித்ததோடு, விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார் பிரதமர். சாவர்க்கர் வழியில் வந்தவராயிற்றே!

‘இவை எவ்வளவு நல்ல சட்டங்கள் என்று நான் தான் விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பிஜேபிகாரர்கள் கூட சொல்வதில்லை” என்ற ராஜ விசுவாசி எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களவையில் வாக்க ளித்து இவற்றை சட்டமாக்க உதவிய அஇஅதிமுக, பாமக எம்பிக்கள், “500 வருடம் போராடினாலும் இந்த சட்டத்தில் ஒரு கமாவைக் கூட மாற்ற மாட்டோம், இது எங்கள் மோடி அரசு” என்று நெஞ்சில் அடித்துக் கொண்ட கொண்ட அண்ணாமலை ஆகியோரெல்லாம் இப்போது எங்கே போய்த் தம் முகத்தை வைத்துக் கொள்வார்கள்!

டெல்லி மாநகரின் எல்லைகளில் காத்துக்கிடந்ததோடு விவசாயிகள் நிற்கவில்லை. சாதி மதங்களைப் பாரோம் என லட்சக் கணக்கில் மக்கள் திரண்ட “மகா பஞ்சாயத்”துகள், முசாபர்பூர் (உபி), கர்னால் (ஹரியானா), பிப்பட் (ராஜஸ்தான்), லக்னோ (உபி) போன்ற இடங்களில் நடந்தன. ஐந்து மாநில தேர்தல்களை எதிர்கொள்ளும் நிலையில், படுதோல்வி அடைந்து ஆட்சி அதிகாரம் பறிபோய்விடுமே என்ற பதற் றத்தில் தான், மோடி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இடைத்தரகர்கள், தீவிரவாதிகள் என்றெல்லாம் அவர் எள்ளி நகையாடப்பட்டவர்களிடம், ‘விவசாயிகளே, வீடு திரும்புங்கள்’ என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

நாங்கள் மட்டுமென்ன வீதியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பியா கிடக்கிறோம்? இந்தப் பிரச்சினைகளில் தீர்வு ஏற்பட்டவுடன் எங்களுடைய வீடுகளுக்கும், குடும்பங்களுக்கும், விவசாயத்திற்கும் வெகு விரைவில் திரும்ப வேண்டும் என்று தான் எண்ணுகிறோம். நீங்களும் அதை விரும்பினால் எங்களது ஆறு கோரிக்கைகளைப் பற்றி உடனடியாக எங்களிடம் பேசித் தீர்வு காணுங்கள்”

“விவசாயியின் விளைபொருளுக்கு, பயிர்ச் செலவோடு 50% அதிகம் வைத்து குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யுங்கள்! மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப் பெறுங்கள்! தில்லி காற்று மாசுக்காக விவசாயிகளை தண்டிப்பதை நிறுத்துங்கள்! விவசாயிகள் மீது போடப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளை ரத்து செய்யுங்கள்! லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்வதற்கு காரணமான அஜய் மிஸ்ரா டேனியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி, கைது செய்யுங்கள்! இந்தப் போராட்டக் களத்தில் இறந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை தருவதோடு, சிங்கு பார்டரில் அவர்களுக்கென நினைவுச் சின்னம் எழுப்புங்கள்! அதோடு உங்களை நம்ப முடியாது, உங்கள் வாக்குறுதிப்படி நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்து முடியுங்கள்!” என்று விவசாயிகள் கூட்டமைப்பு பதில் அளித்திருக்கிறது.

போராடும் விவசாயிகளின் கூட்டமைப்பை அழைத்துப் பேசி அதில் ஒரு தீர்வு காண மோடிக்கு மனமில்லை. குருநானக் ஜெயந்தி தினத்தன்று தன்னிச்சையாக அறிவித்து, சீக்கியர்களை சீராட்ட நினைத்திருக்கிறார். ஆனால் ‘அல்லாஹு அக்பர்’ என்றும், ‘ஹர ஹர மகாதேவ்’ என்றும், ‘சத் ஸ்ரீ அகால்’ என்றும் தோளோடு தோள் சேர்ந்து வர்க்கமாய் திரண்டு நின்ற விவசாயிகளின் ஒற்றுமையை மோடியின் சில்மிஷத்தால் உடைக்க முடியவில்லை. கோரிக்கைகள் முற்றாக தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடர்கிறது.

இந்த காலத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமை புதிய பரிமாணம் பெற்று இருக்கிறது. போராடிய, போராடத் துணைநின்ற அனைவரும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் உரித்தானவர்கள். களத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.

Js_34issue_Nov.28 – Dec.04_Page 5

Js_34issue_Nov.28 – Dec.04_Page 5

Js_34issue_Nov.28 – Dec.04_Page 6

Js_34issue_Nov.28 – Dec.04_Page 6
கொரோனா தடுப்பூசி வழங்குவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

கொரோனா தடுப்பூசி வழங்குவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

ஜி.ஆர். இரவீந்திரநாத்

 

சாலை விபத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள ``நம்மை காக்கும் 48’’ திட்டம் வரவேற்புக்குரியது.

கொரோனா தடுப்பூசி வழங்கு வதில் தமிழக அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி அதிக கவனத்துடன் செயல்பட்டுவருவது பாராட்டுக்குரியது. வரவேற்புக் குரியது.

இந்தியாவில் “தடுப்பூசி தயக்கம்’ (ஸ்ணீநீநீவீஸீமீ லீமீsவீtணீஸீநீஹ்) 7 விழுக்காடு அளவு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தமிழகத்தில் “தடுப்பூசி தயக்கமும்’, ``எதிர்ப்பும்’’, அதிகமாகவே நிலவி வருகிறது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு நடத்திய ஆய்வின் படி தமிழகத்தில் ‘தடுப்பூசி தயக்கம்’ இள வயதினரிடம் 16.9 விழுக்காடாகவும், வயதானவர்களிடம் 27.6 விழுக்காடு வரையும் உள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 75 விழுக்காட்டிற்கு மேல் போடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களில் பெரும் பாலோனோர் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதில் தயக்கமும் எதிர்ப்பு மனநிலையும், பக்க விளைவுகள் பற்றிய தவறான நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்களை தடுப்பூசிப் போட்டுக்கொள்ள இணங்க வைக்க பல்வேறு துறைகள் மூலம், பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையுள்ளதை கள நிலவரம் உணர்த்துகிறது.

கொரோனா தடுப்பூசியின் அவசியம், நன்மை, அறிவியல் உண்மைகள், பாதுகாப்புத் தன்மைகளை விளக்கி அனைத்து விதமான ஊடகங்களிலும் பல வகையான பிரச்சார விளம் பரங்கள் மூலம், தொடர்ந்து விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மதத் தலைவர்களையும், அரசியல் கட்சி களை சேர்ந்தவர்களையும், இளைஞர் மாணவர் அமைப்புக ளையும், பெண்கள் சுயநிதிக் குழுக்களையும், தொண்டு நிறுவ னங்களையும் பயன்படுத்திட வேண்டும். அவர்கள் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை, போட்டுக்கொள்ள இணங்கச் செய்ய வேண்டும். அவர்களை மருத்துவ முகாம் களுக்கு அழைத்து வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளச் செய்திட வேண்டும். அவ்வாறு அழைத்து வருபவர்களுக்கும், பயனாளிகளுக்கும் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், பீகாரின் பங்கட்வா மாதிரி (ஙிணீஸீளீணீtஷ்ணீ னீஷீபீமீறீ), புவனேஸ்வர் மாதிரி போன்ற சாதனை மாதிரிகளைப் பின்பற்றி விரைவில் தமிழகமும் 100 % கொரோனா தடுப்பூசி வழங்கும் இலக்கை அடையவேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி வழங்குவதை மருத்துவர்கள் பொறுப்பு, அரசின் மருத்துவத் துறையின் பொறுப்பு என கருதுவதை கைவிட்டு, அதை “மக்கள் இயக்கமாக’’ மாற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதை கறாராக நடைமுறைப்படுத்திட வேண்டும். கூட்டம் சேரக்கூடிய, டாஸ்மாக் கடைகளில் மதுபானம் பெறவும், ரேஷன் கடைகளில், பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுகளை பெற்றிடவும், பேருந்து மற்றும் ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன் படுத்திட கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட சான்றிதழ் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இந்த அரசாணை பொருந்தாத இடங்களில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள், பொதுவான இடங்களுக்கு வரும் பொழுது தங்களின் ஸிஜிறிசிஸி ழிணிநிகிஜிமிக்ஷிணி பரிசோதனை முடிவுகளை 3 நாட்களுக்கு ஒருமுறை, சொந்த செலவில் செய்து காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகளை கொண்டுவர வேண்டும்.

மருத்துவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிப்பதும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை (விமீனீஷீ) அனுப்புவதும், இலக்கை நிறைவேற்ற வேண்டும் என மிரட்டும் போக்கை கடைபிடிப்பதும் சரியானதல்ல. இதனால், மருத்துவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்துவரும் அவர்கள், அரசின் இத்தகைய போக்கால் மனம் நொந்து போய் உள்ளனர். எனவே இத்தகைய போக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தடுப்பூசிகளுக்கு எதிராகவும், நவீன அறிவியல் மருத்துவத் திற்கு எதிராகவும் திட்டமிட்டே சிலர் உள்நோக்கோடு தவறான செய்திகளை பரப்புகின்றனர். மருத்துவ அறிவியலைப் பற்றிய புரிந்து கொள்ளலில் மத்திய மாநில அரசுகளும் தவறான போக்கை கடைபிடிக்கின்றன. மத, இன, தேசிய அடிப்படையிலான அடையாள அரசியலை மருத்துவ அறிவியலில் திணிப்பது, நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. இது தடுப்பூசி வழங்குவதிலும், பல்வேறு நோய்ளை தடுப்பதிலும் தடைகளை ஏற்படுத்துகிறது.

மத்திய - மாநில அரசுகளே நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு விட்டு, தடுப்பூசி வழங்குவதை தனிப்பட்ட மருத்துவர்களின் பொறுப்பு என அவர்கள் தலையில் கட்டுவது என்ன நியாயம்? மருத்துவ அறிவியல் குறித்த தெளிவான, சரியான புரிதலுக்கு வர ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். போலிமருத்துவ அறிவியலையும், தவறான மருத்துவ அறிவிலையும், காலா வதியான மருத்துவ அறிவியல் முறைகளையும், மூட நம்பிக் கைகளையும், தவறான கருத்துக்களையும் மக்களிடம் பரப்பு வதை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். தடுப்பூசிக்கு எதிரான மனநிலை என்பது திடீரென உருவான ஒன்றல்ல. அந்த மனநிலை உருவாக ஆட்சியாளர்களும் காரணமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி இலக்கை எட்ட முடியாததற்கு, மருத்துவர்களை பலிக்கடா ஆக்குவது நியாயம் அல்ல. சரியல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவர்களின் நீண்டநாள் ஊதிய

உயர்வுக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கொரானா ஊக்கத்தொகை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் தற் காலிக மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை.

இத்தகைய நிலைமைகளிலும், மழையிலும், புயலிலும், வெள்ளத்திலும், ஓய்வின்றி அனைத்து மருத்துவத்துறையினரும் வேலை

செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களிடம் மருத்துவத்துறை அதிகா ரிகள், மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் கடுமையான முறை யில் நடந்து கொள்கின்றனர்.இதனால் பலர் உள ரீதியாக பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சை பெறும் நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.

நாள்தோறும் 12 மணிநேரம் வரை வேலை செய்யும் அவர் களுக்கு , கூடுதல் பணி நேர்த்திற்கான படிகள் (ஷீஸ்மீக்ஷீ tவீனீமீ ணீறீறீஷீஷ்ணீஸீநீமீ),ஆபத்தான பணிக்கான படி (க்ஷீவீsளீ ணீறீறீஷீஷ்ணீஸீநீமீ) வழங்க வேண்டும்.

மருத்துவத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவ தோடு, அவர்களின் உடல் நலத்தையையும், மன நலத்தையும் தமிழக அரசு காக்கவேண்டும். அதற்காக ‘மருத்துவத் துறையி னருக்கான நல வாரியம்’ அமைக்கப்பட வேண்டும்.

தடுப்பூசி செலுத்திட வீடு வீடாக அனைத்து வகை மருத்துவத்துறை பணியார்களையும் அனுப்புவதால், இதர கொரோனா அல்லாத மருத்துவ சேவைகள் அனைத்தும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. எனவே, பயனாளிகளை முகாம்களுக்கு வரவழைத்து தடுப்பூசிகளை போட வேண்டும்.

சென்னை இராஜிவ் காந்தி மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர்கள், சக ஆண் மருத்துவர்களால் பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத் திட வேண்டும். சட்ட ரீதியாக தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும். பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை வெறும் இடமாறுதல் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது சரியல்ல.

அரசு மற்றும் தனியார் மருத்துவ, செவிலியர் கல்லூரிகள், மருத்துவமனை நிர்வாகங்கள், மருத்துவ, செவிலிய மாண விகள், பெண் மருத்துவர்கள், மற்றும் பெண் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. ஆணாதிக்க மனநிலையோடு, அலட்சியமாக செயல்படும் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளிலும் ``விஷாகா’’ குழுக்களை அமைத்திட வேண்டும். அவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இது போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கடந்த மாதம், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்களை, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க நிர்வா கிகளுடன் நேரில் சந்தித்து முன்வைத்தோம்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உறுதி அளித்தார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறுவது தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குழந்தை பிறப்பிற்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பது போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.

அதேசமயம் சிசேரியன் அறுவை சிகிச்சையே தேவையற்றது. சிசேரியன் அறுவை சிகிச்சையே கூடாது என்ற பார்வையும் சரியல்ல. இந்த அறுவை சிகிச்சையை செய்யும் வசதி பரவலா னதும், சிறிய மருத்துவமனைகளில் கூட செய்ய முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதும் அவசரக் காலத்தில் தாய்,சேய் உயிர் காத்திட உதவுகிறது. குறைமாத, குறை எடை குழந்தைகள் பிறக்கவும், காக்கவும் உதவுகிறது.

பேறுகாலத் தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் பன்மடங்கு குறைய காரணமாகியுள்ளது. எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு எதிராக, அறிவியலுக்குப் புறம்பான வகையில் பரப்புரைகளை மேற்கொள்வது சரியல்ல.இது மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

வணிக நோக்கில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் அவசியமில்லாத சிசேரியன் அறுவை சிகிச்சைகளை சில சமயங்களில் செய்வதை மறுக்க முடியாது.

குழந்தைப் பேற்றில் ஒரு சிறிய இயற்கையான சிக் கல் ஏற்பட்டாலும், அதை பெரிதாக்கி, வழக்குத் தொடுத்து, மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்பது, மருத்துவ மனையின் நற்பெயரைக் கெடுப்பது என்பது போன்ற அச்சு றுத்தல் காரணமாக மருத்துவர்கள் ரிஸ்க் எடுக்காமல், பீமீயீமீஸீsவீஸ்மீ ஜீக்ஷீணீநீtவீநீமீ செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறர்கள். அதனாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்கின்றன.

சிசேரியன் அறுவை சிகிச்சைகளை தணிக்கை செய்தல் (ணீuபீவீt), நிலையான சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்துதல் (stணீஸீபீணீக்ஷீபீ tக்ஷீமீணீtனீமீஸீt ரீuவீபீமீறீவீஸீமீs ணீஸீபீ ஜீக்ஷீஷீtஷீநீஷீறீs), உச்சப் பட்ச மருத்துவ இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்தல் (uஜீஜீமீக்ஷீ றீவீனீவீt யீஷீக்ஷீ நீஷீனீஜீமீஸீsணீtவீஷீஸீ ணீனீஷீuஸீt), பிரசவம் பற்றிய அறிவியல் பூர்வ விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற் படுத்துவது போன்ற பல் வேறு நடவடிக்கைகளை எடுத் தால் மட்டுமே, சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக் கையைக் குறைக்க இயலும்.

தொடர்புக்கு: 9940664343

 

Js_34issue_Nov.28 – Dec.04_Page 7

Js_34issue_Nov.28 – Dec.04_Page 7

Js_34issue_Nov.28 – Dec.04_Page 8

Js_34issue_Nov.28 – Dec.04_Page 8

Js_34issue_Nov.28 – Dec.04_Page 9

Js_34issue_Nov.28 – Dec.04_Page 9

Js_34issue_Nov.28 – Dec.04_Page 10

Js_34issue_Nov.28 – Dec.04_Page 10

Js_34issue_Nov.28 – Dec.04_Page 11

Js_34issue_Nov.28 – Dec.04_Page 11

Js_34issue_Nov.28 – Dec.04_Page 12

Js_34issue_Nov.28 – Dec.04_Page 12

Js_34issue_Nov.28 – Dec.04_Page 13

Js_34issue_Nov.28 – Dec.04_Page 13

Js_34issue_Nov.28 – Dec.04_Page 14

Js_34issue_Nov.28 – Dec.04_Page 14

Js_34issue_Nov.28 – Dec.04_Page 15

Js_34issue_Nov.28 – Dec.04_Page 15

Js_34issue_Nov.28 – Dec.04_Page 16

Js_34issue_Nov.28 – Dec.04_Page 16

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button