காந்தி இந்திய
அடிமை காரிருளை
கிழித்த விடுதலை சூரியன்- நீ
ஒத்த கைத்தடியால்
வெள்ளை ஏகதிபத்தியத்தை
அலறி ஓட செய்தவன்- நீ
உன் பொக்கை வாய்
புன்னகை கண்டு
56 இஞ்ச் மார்பு படபடக்கிறது
காந்தி என்னும்
அரையாடை பக்கிரியை கண்டு
‘அரை டவுசர்’ அஞ்சு நடுங்குகிறது
காந்தி
இந்தியாவின் புன்னகை
கோட்சேவின் குண்டுகள்
துளைத்த போதும்
தெறிப்பது ரத்தம் அல்ல!
அன்பு, அன்பு, அன்பு
கோட்சேவின் துப்பாக்கி -இன்று
கரம் மாறி இருக்கலாம்
காந்தியின் அன்பு நிறம் மாறுமா?
கவிதை: என்.எஸ்.பிரதாப் சந்திரன்
மாவட்டச் செயலாளர்
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்
திருவள்ளூர் மாவட்டம்