
47வது அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் மட்டுமல்லாமல், பல்வேறு நாட்டின் அரசுப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதம மந்திரிகள் பங்கேற்றனர். அரசியல்வாதிகளின் பெரும்பாலானவர்கள் வலதுசாரிய ஏகாதிபத்திய தன் முனைப்புச் சூழ்ச்சியாளர்கள் ஆவார்கள்.
பதவியேற்பு விழா முடிவில் சிறிது நேரம் கூட வீண் போகாத நிலையில் அதிபர் ட்ரம்ப் பல ஆணைகளில் கையெழுத்திட்டார். அவற்றில் மிக முக்கியக் கவனம் ஈர்த்தது பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுதலாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் மனிதர்களின் செயல்பாடுகளினால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலநிலை மாற்றம் பற்றியவை. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை (வெப்ப அதிகரிப்பு, உணவு பாதுகாப்புச் சவால்கள், பயிர் விளைச்சல் மாற்றங்கள், ஏகபோக பயிர் விளைச்சல் மாற்றங்கள், எதிர்பாராத வெள்ளங்கள், மூன்றாவது உலக நாட்டு மக்களின் சுகாதாரக் கேள்விக்குறிகள்) நாம் அறிவோம் அவ்வாறான காலநிலை மாற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதுதான் அந்த பாரிஸ் ஒப்பந்தம்.
அந்தப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இந்தச் சவால்கள் பற்றிய சிந்தனை கிடையாது. அவர்களுக்கு வளர்ச்சி என்பது பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், சுகாதார வசதி, கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்களது நம்பிக்கை எல்லாம் மேம்பட்ட எந்திரவியலாக்கம் எரிபொருள், புதை எரிபொருள், (அணுசக்தி அதன் பேரழிவு பற்றிய சிறிதளவும் சிந்தனைகள் இல்லாமல்)
அடுத்ததாக உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுதல். மக்கள் நலன் முன்னேற்ற முன்னெடுப்புப் பொறுப்புகளில் இருந்து உதறித் தள்ளுதல். ஏனென்றால் அடிப்படையில் உலகச் சுகாதார நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களாகும். இந்நிறுவனங்கள் பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா தடுப்பூசி விற்பனையில் அதிக லாபம் பெற்றவர்கள். மேலும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைத் தடுப்பூசி விவகாரத்தில் அச்சுறுத்தத் தவறவில்லை
இரு பாலினக் கொள்கை என்பது பிற்போக்குத்தனமானது -அறிவியலுக்கு அப்பாற்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகளைப் பாதிக்கும்.
குடி பெயர்ந்தவர்கள் மீது காட்டப்பட வேண்டிய மனிதாபிமானம் சற்றும் இல்லை. அதற்கு மாறாக சந்தேகம் என்ற கண்ணோட்டம்தான் தலை தூக்குகிறது. தென் அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா, கியூபா போன்ற நாடுகளின் மீதான கடும் கண்டிப்புகள் ஏகாதிபத்திய தலையிடுகளாகத் தொடர்வது போன்ற பயமுறுத்தல்கள் உருவாக்கப்படுகின்றன.
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடாவாக பெயர் மாற்றம், பனாமா கால்வாய் முடக்கம் மற்றும் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு தன்னுடைமையாக்குதல் போன்றவை பற்றிய தீர்வுகள்.
உலகளாவிய செயல்களில் இன்னும் பெரிய வல்லரசாகக் காண்பித்துக்கொண்டு மத்திய கிழக்குப் பகுதி நாடுகளுக்கு ஆயுதங்கள் விநியோகித்தல்.
ஒருபோதும் போர் நிறுத்தத்தில் புட்டினை தயவு கூர்வதோ செலான்சிக்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்துகின்ற முயற்சியில் ஈடுபடவில்லை. ஐரோப்பிய நாடுகளையோ புட்டினையோ உக்ரைன் போரை முடிக்க முயற்சிக்கவில்லை அமெரிக்க அதிபர் நினைத்தால் போர் நிறுத்தம் சாத்தியப்படும்.
டாலர் தேசத்துப் பொருளாதார அடிப்படை என்பது போர்த் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை. போர்களைத் தூண்டி விடுவதால் குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இது அந்நாட்டின் இத்தகைய நடத்தைப் போக்கு செயல்திறன். 18வது 19வது நூற்றாண்டுக் கருத்தாக்கம் போன்றவை. இது உலகுக்கு ஓர் அச்சுறுத்தல்.
உலக நாடுகளிடையே பல்முனைப் போக்கான ஒத்துழைப்பு இல்லாமல் ஒருமுனைப் போக்கான அச்சுறுத்தல், மற்ற நாடுகளின் இறையாண்மையைப் புறக்கணித்தல், நாடுகளிடையே பரஸ்பர மரியாதையின்மை போன்றவை நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும்.
ஏற்றுமதி இறக்குமதிக்கான வரிச் சட்டம் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
உலகச் சமத்துவமின்மை சுரண்டலுக்கு வழிவகுக்கும்.
உலக அளவில் போர்த் தளவாடங்கள், அணுசக்தி வகைத் தளவாடங்கள், உற்பத்திப் பந்தயத்தின் செலவினங்கள் பெரும் பங்கு வகிக்கிறது அமெரிக்கா. இது ஒரு தற்காப்புப் பாதுகாப்பான பொருளாதாரத் திட்டம் என்றே சொல்லலாம்.
பெரும் பணக்காரர்கள்சூழ பதவியேற்பு விழாவில் உலகலாவிய அணுசக்தி போர்த் தளவாடங்களை அழித்தல் பற்றி அதிபர் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் வளரும் நாடுகள் திறம் சார்ந்த தீர்மானங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது.
நியூ ஏஜ் கட்டுரையின் சுருக்கம்