உள்ளூர் செய்திகள்தமிழகம்
இரண்டு தொகுதிகள் ஒதுக்கி உடன்பாடு
திமுக – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்படிக்கையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்களும் கையெழுத்திட்டனர்.
அப்போது, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பழனிசாமி, வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.