மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி! ராஜஸ்தானிடம் எளிதான வெற்றி!
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி மிகவும் பாதுகாப்பாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2021ன் 36வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டங் தேர்வு செய்தது.
டாஸ் தோற்ற டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியும் காத்திருந்தது. தொடக்க ஆட்டக்கார்கள் இருவருமே அடுத்தடுத்த ஓவரில் வெளியேறினர். அதன் பின் ஜோடி சேர்ந்த பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதன் பின் வந்த ஹெட்மயர்ம் விரைந்து ரன்கள் அடிக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது. லலித், அக்ஷர், அஸ்வின் அதிரடியாக ரன்களை அடிக்க தவறியதால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் முஸ்தபிர் மற்றும் சக்கரியா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கை அடித்து விடலாம் என்று எண்ணி களமிறங்கிய ராஜஸ்தான் அணியை நினைத்தது தப்பு என்று என்ன வைத்தனர் டெல்லி பந்து வீச்சாளர்கள். முதல் இரண்டு ஓவரிலேயே தொடக்க ஆட்டகாரர்கள் லிவிங்ஸ்டன் மற்றும் ஜெய்ஸ்வால் சொற்ப ரங்களுக்கு வெளியேறினர். டேவிட் மில்லரும் அஸ்வினின் சூழலில் சிக்கினார். இந்த விக்கெட்டின் மூலம் T20 யில் 250 விக்கெட்கள் மேல் எடுத்த 3வது வீரர் என்ற சாதனை படைத்தார் அஸ்வின். அதன் பின் வந்த ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறினர். கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்புடன் விளையாடி 53 பந்துகளில் 70 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.