கட்டுரைகள்

டீப்சீக்: அமெரிக்காவைப்புரட்டிப்போட்டசீனா

மு.வீரபாண்டியன்

இது அறிவியல் தொழில்நுட்ப யுகம். அதிலும் செயற்கை நுண்ணறிவு காலம்.
நமது கரங்களில் தவழும் செல்போன் துவங்கி, கம்ப்யூட்டர், விண்வெளி ஆய்வுகள் என யாவும் செயற்கை நுண்ணறிவு (AI) artificial intelligency.

இந்தத் துறையில் இது நாள் வரை அமெரிக்காவின் ‘சிலிகான்’ தான் கோலோச்சியது.
மைக்ரோ, ஆப்பிள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூனிகான்ஸ் என இன்னும் பல.
பல லட்சம் கோடியில் கட்டமைப்பு. இதில் ‘சிப்’ மிகப் பெரிய பங்காற்றுகிறது. இதன் உற்பத்தியில் தைவான் முதலிடம் வகிக்கிறது.

இதுநாள் வரை சீனா – தைவான் சிம் வர்த்தகம் இருந்தது. சீனாவின் உறவைத் துண்டித்து, தைவானை இணைத்துக் கொண்டது அமெரிக்கா. இதனை ‘சிப்’ போர் என்று செயற்கை நுண்ணறிவு உலகம் வர்ணித்தது.

எப்படி முயன்றும் அமெரிக்கா, தைவான் இடத்தை சீனா நெருங்க முடியாது என்றனர்.
அமெரிக்க நுண்ணறிவு பரிமாற்றம் என்பது ஐரோப்பாவுடன் நிறுத்திக் கொண்டது அமெரிக்கா.

செயற்கை நுண்ணறிவில் இந்தியர்களும், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மிக, மிக திறமையானவர்கள். ஆனால், இவர்களில் பலர் இருப்பது இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில், ஐரோப்பாவில். எந்தச் சூழலிலும் இவர்களை அமெரிக்கா வெளியே அனுப்பாது.
‘கிரீன் கார்ட் சிஸ்டம்’ எல்லாம் இங்கே பேசாது.

சரி தற்போது என்ன? உலகம் எதைப் பேசுகிறது? அமெரிக்காவும், ஐரோப்பாவும் அலறுவது ஏன்?

அதுதான் டீப் சீக் எனும் சீனாவின் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு.
இதுநாள் வரை உலகில் கோலோச்சிய அமெரிக்கா “ஓபன் AI Tool” என்பதுதான்.
ராணுவ ரகசியங்கள், உலகம் அறிய முடியாத உளவு வேலைகள், பல பொழுதுபோக்குகள் என யாவும் இந்த AI Tool-™ ல் அடக்கம்.

ஆனால் சில மாதங்களிலேயே மிக மிகக் குறைந்த செலவில், அதாவது அமெரிக்கா செயற்கை நுண்ணறிவுக்கு 100 ரூபாய் செலவு செய்கிறது என்றால், சீனா செய்திருப்பது வெறும் 5 ரூபாய். டீப் சீக் அமெரிக்கா என நாம் கூறினால், நிமிடத்தில் அமெரிக்கா வரலாற்றை அப்படியே தருகிறது.

ஒரு வரி எழுதினால் போதும் அல்லது ஒரு வரி பேசினால் போதும், ஒட்டுமொத்த அமெரிக்காவைப் புரட்டி எடுக்கிறது டீப் சீக். சீனாவின் இந்தப் புதிய கண்டுபிடிப்பை அமெரிக்கா, ஐரோப்பிய செயற்கை நுண்ணறிவு பிரிவு வியந்து பார்க்கிறது.

இன்னும் 50 ஆண்டுகள் முன்னேற வேண்டிய இந்த நுண்ணறிவு குறைந்த செலவில், சீனாவுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது என உலகமே விவாதிக்கிறது. சீனாவின் நுண்ணறிவு, அதன் விண்வெளி ஆய்வுகளில் வெளிப்படுவதாக ‘சிலிக்கான்’ விண்வெளிப் பிரிவு முன்னரே தெரிவித்தது.

அமெரிக்காவோடு எவராலும் நெருங்க முடியாது என்ற அமெரிக்கக் கப்பற்படை கணிப்பையும் சீனா உடைத்து விட்டது. இன்று நவீனக் கப்பற்படையில் சீனா முதலிடம், அமெரிக்கா பின்தங்கி விட்டது என்பதை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது.

டீப் சீக் பற்றி உலகம் உரையாடல் செய்யும் தருணத்தில், அமெரிக்கா, ஐரோப்பா, தைவான் நுண்ணறிவு வல்லுநர்கள் உறைந்து விட்டனர். சீனாவின் இந்தக் கண்டுபிடிப்பினால் பங்குச் சந்தை குளோஸ், லட்சக்கணக்கான ட்ரில்லியன் இழப்பு, மான்செட், விவர்ஸ் அதன் பார்வையாளர்கள் என யாவும் வீழ்ந்துவிட்டது.

சீனாவின் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையா என அமெரிக்க அதிபரும், அமெரிக்கா ராணுவத் தலைமையும் சிலிக்கானைக் கேட்கிறது. சிலிக்கான் அதாவது அமெரிக்காவின் நுண்ணறிவு தலைமை, ஆம்! என்கிறது. அத்தோடு இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றது மாணவர்களும், இளைஞர்களும். அதுதான் மேலாதிக்க நாடுகளால் ஏற்க முடியவில்லை.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் விவிலியக் கதையின் ‘டேவிட்’ “கோலியத்” போல் ஒப்பீடு செய்கிறார்கள். மிகச் சாதாரண ஆடு மேய்ப்பவன் டேவிட், வெல்ல முடியாத திமிர் பிடித்தவன் கோலியத்! அவனைச் சிறுவன் டேவிட் வீத்தியது கதை. அப்படித்தான் அமெரிக்காவின் வெல்ல முடியாத சிலிக்கானை, சீனா வீழ்த்தி விட்டதாகக் கூறுகின்றார்கள்.

இனி அமெரிக்காவும், மேற்கு உலகமும் தூங்காது. எப்படியாவது சீனாவை வீழ்த்த வேண்டும். வரும் நூற்றாண்டு ஆசியாவின் பக்கம் சென்றுவிடக் கூடாது.
ஆனாலும் வரும் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டுதான்.

– மு.வீரபாண்டியன்
மாநிலதுணைச்செயலாளர், இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button