தமிழகம்மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை – 2024
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை – 2024 சென்னையில் உள்ள கட்சியின் மாநில அலுவலகத்தில் இன்று (31.03.2024) வெளியிடப்பட்டது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் முன்னிலையில், கட்சியின் மூத்த தலைவர் தகைசால் தமிழர் இரா.நல்லகண்ணு வெளியிட தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கை குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விளக்கிக் கூறினார்.
மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன் மற்றும் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.சிவா, பா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.