சிபிஎம் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தையார் மறைவுக்கு இரங்கல்

சிபிஎம் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் தந்தையார் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தை திரு. சுப்புராம் (வயது 79) அவர்கள் இன்று (28.03.2025) உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பொது வாழ்வுக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் திரு.சுப்புராம் அவர்கள். அவரது மறைவு கவலையளிக்கிறது. தந்தையை இழந்து வாடும் தோழர் சு.வெங்கடசேன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.