சினிமா
Trending

Beast படபிடிப்புக்காக டெல்லி வந்த தளபதி விஜயின் வீடியோ வைரல்

Beast: நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படபிடிப்பு டெல்லியில் தொடர்வதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படபிடிப்பின் படபிடிப்புக்காக டெல்லிக்கு  வந்திருக்கிறார் விஜய் (Actor Vijay).

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இசை அமைப்பாளர் அனிருத் இசையமைkகும் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெல்லியில் படபிடிபில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் விஜய் டெல்லி மால் ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது, விஜயை பார்த்த பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்த பின் சென்னையில், ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து அதில் பீஸ்ட் (Beast) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். பிறகு சென்னை புறநகரில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.  

இதுவரை பல கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது பீஸ்டின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடத்த திரைப்படக் குழு திட்டமிட்டிருந்தது. பீஸ்ட் திரைப்படம் 2022 பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.

ALSO READ: தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் பீஸ்ட் பட நாயகி புகழாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button