
விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவரும், விடுதலை பெற்ற இந்தியாவை நிர்மாணிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி தந்தவருமான அண்ணல் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவுநாள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கே.சிவா, பா.கருணாநிதி, வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.