தொழிலாளர்கள்.. விடியும் முன் வேலைக்குச் செல்ல வேண்டும். பொழுது சாய்ந்து, இருண்ட பிறகுதான் வீட்டிற்குத் திரும்ப முடியும். ஆலையில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. எந்தச் சட்டமும் கிடையாது. கேள்வி கேட்க நாதியில்லை. 31-10-1920 அன்று விடிவெள்ளியாய் முளைத்தது ஏஐடியுசி. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவே அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த காலத்தில், தொழிலாளர்களின் உரிமைக்காக, நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுக்க உருவானதுதான் ஏஐடியுசி.
- அதன் வரலாறு.. ரத்தமும் சதையுமான தொழிலாளியின் வரலாறு.
- அதன் வரலாறு.. வீறுகொண்டு எழுந்த பாட்டாளியின் உரிமை கீதம்.
- அதன் வரலாறு.. தொழிலாளர்கள் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட வரலாறு.
- அதன் வரலாறு.. நாட்டின் விடுதலைக்காக தொழிலாளி களம் புகுந்த கதை.
- இப்படி ஏராளம்.. ஏராளம்..
இவை பகுதி, பகுதியாக நாளை முதல் ஜனசக்தி இணைய தளத்திலும், அடுத்த நாள் ஜனசக்தி முகநூலிலும் தொடர்ந்து இடம்பெறும்.
ஏஐடியுசி தேசியச் செயலாளரும் ஜனசக்தி ஆசிரியருமான டி.எம்.மூர்த்தி எழுதும் தொடர்..
எழுச்சியுடன் இணையுங்கள். ஏஐடியுசி வரலாற்றைப் படியுங்கள்