
இன்றைய உலக அரசியலில் சூழலியல் குறிப்பிட்ட பங்காற்றுகிறது. சூழலியலை காத்து அடுத்த தலைமுறையின் கையில் அளிப்பது மானுடத்தின் மகத்தான அரசியல் என மார்க்சியம் பிரகடனப்படுத்துகிறது.
நிகழ்கால உலகமும், பிரபஞ்சம் யாவும் பருவநிலை மாற்றத்தால் முற்றிலும் சீரழிகிறது. காற்று, நீர், நிலம், வளிமண்டலம், விண்வெளி, கடல் பவளப்பாறைகள் என யாவும் மாசுபட்டு பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாறுகிறது. எனவே புவியைப் பாதுகாப்பது இப்போது மேற்கொள்ள வேண்டிய பிரதானமான முதன்மையான அரசியல்.
முதலாளித்துவ அறிஞர்கள் தனிமனிதர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இயற்கை அழிவதற்கு தனிமனித செயலும் காரணமாக உள்ளன. மனித அசுத்ததாலும், புவி மற்றும் கடல், விண்வெளி என மனிதன் ஆதிக்கம் வளர்வதாலும் இயற்கை சமன் பாதிக்கப்படுகிறது.
மனிதன் தேவைக்கு மீறி அளவில் இயற்கைக்கு ஒவ்வாத பொருள்களை பயன்படுத்துகிறான். குப்பை போடுகிறான், கடலில் கழிவுகளை கொட்டுகிறான், தண்ணீரை வீணாக்குகிறான், வாகன புகையை மூட்டுகிறான், இப்படி தனிமனித செயல்கள், தனிமனித ஆதிக்கம் தான் பருவநிலை மாற்றத்திற்கு முதன்மைக் காரணம் என்றும், எனவே முழு பொறுப்பு மனிதன், அதிலும் தனி மனிதன். எனவே இந்த யுகம் தனிமனித ஆதிக்க யுகம் என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள், இயற்கை ஆர்வலர்கள்.
ஆனால், அது உண்மையா? புவிக்கோள், விண்வெளி, பிரபஞ்சம்யாவும் குறிப்பாக மலைகள், காடுகள், கடல்கள் என மூலதன லாப வெறியால் சூறையாடப்படுகிறது. இதனால் தான் இயற்கை அழிகிறது. பருவநிலை மாறுகிறது. புகை வெளியிடும் மாபெரும் அலைகள் அல்லது அணு ஆயுதங்கள், கடல் மீது கடல் வீசப்படும் ஆபத்தான போர் கருவிகள், ஒத்திகை ஆயுதங்கள், லேசர் ஆயுதங்கள், விண்வெளி ஆதிக்கம் முயற்சிகள் யாவுமாக சேர்ந்து இயற்கையை சீரழிக்கிறது. பருவநிலையை மாற்றுகிறது. இதனை தான் உலக இடது இயற்கை ஆய்வாளர்கள், இது மூலதன ஆதிக்கம் என்கிறார்கள்.
தனிமனிதனின் சிறு சிறு இயற்கை ஒவ்வாத செயல்களால் பருவநிலை பாதிக்கிறது என்பதைவிட ஏகாதிபத்திய லாப வெறியால், யுத்த வெறியால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. புவி மண்டலத்தின் சமச்சீர் அழிகிறது. பருவநிலை மாறுகிறது, இங்கு முதன்மையான குற்றவாளி முதலாளித்துவ லாப வெறி தான்.
வரலாற்றில் இயற்கை மீதான முதல் தாக்குதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் துவங்கி வைக்கப்பட்டது. சாக்ஷோ ஆங்கிலேயர்கள் தான் அமெரிக்காவில் உள்ள செவ்விந்திய மலைகளை கைப்பற்றினார்கள். கண்டுபிடிக்கப்பட்ட சிறிய பீரங்கிகள் மூலம் செவ்விந்திய மலைகளில் தகர்த்தார்கள்.
இவ்வாறு முதலாளிகள் தகர்த்த மலை “பிளாக் ஹில்ஸ்.” இங்குதான் தங்கம் அதிகம் இருந்தது. இதனை வெட்டி எடுக்க வெள்ளை முதலாளிகள் செவ்விந்திய பூர்வ குடிகள் மீது நடத்திய போர் தான் “தி லாஸ்ட் லேண்ட் வார்” என்று வரலாற்றில் அறியப்படுகிறது. அன்று துவங்கி இன்று வரை ஆப்பிரிக்காவில், மத்திய கிழக்கில் போர் தொடுப்பது, அடிமைப்படுத்துவது தொடர்கிறது. இத்தகைய லாப வேட்டை தான் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
சிறிய காசாவின் மீது இஸ்ரேல் போட்ட அமெரிக்க வெடி மருந்துகள் மட்டும் 6 ஆயிரம் டன், இதுபோல 300 டன் ஆயுதங்கள் வெடி மருந்துகள் வியட்நாம் மீது வீசப்பட்டது. இதில் “நாபாம்“ குண்டுகளும் அடக்கம். வியட்நாமை விட 3 ஆயிரம் மடங்கு தீமை தரும் அணுகுண்டுகள் ஜப்பான் மீது போடப்பட்டன. இப்படி கிடைக்கும் வழிகளில் எல்லாம் ஆதிக்கம் செய்து மனிதர்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பெரிய ஆபத்தாக ஏகாதிபத்தியம் மாறியுள்ளது. இதுவே சோவியத் இல்லாத உலகத்தின் நிலை.
வரலாற்றில் நீண்ட நெடுங்காலம் இயற்கை மீது ஆதிக்கம் செய்யும் மூலதன ஆதிக்க யுகத்திற்கு மாற்றாக புதியதோர் சோசலிச யுகம் எழட்டும். இதற்கான புதிய சிந்தனைகள் மலரட்டும் !!