கட்டுரைகள்

ரோசா லக்சம்பர்க் நினைவு நாள் பேரணி

#இதே நாளில், ஜனவரி 15, 1919 அன்று, ரோசா லக்சம்பர்க் பெர்லினில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ரோசாவின் நினைவைப் போற்றி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

ரோசா லக்சம்பர்க், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இரண்டாம் அகிலத்தின் தலைவர்களில் ஒருவர். ஸ்பார்டகஸ் யூனியன், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இணை நிறுவனர். போலந்து, லிதுவேனியா, ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். 

ஜெர்மனியில் 1919 சனவரியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. இடதுசாரிகளை ஒழித்துக்கட்டுமாறு ஜெர்மானிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் தமது படையினருக்கு உத்தரவிட்டார். 

1919, சனவரி 15ல் ரோசா, லீப்னெக்ட் இருவரும் பிரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டோ ரூஞ்ச் என்பவன், ரோசா லக்சம்பர்க்கை துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தினான்.  ஹெர்மன் சூக்கோன் என்பவன் சுட்டுக்கொன்றான்; ரோசாவின் உடல் பெர்லின் – லாண்ட்வெர் கால்வாயில் வீசியெறியப்பட்டது. 

சுட்டுக் கொல்லப்பட்ட கார்ல் லீப்னெக்ட் உடல், சவக்கிடங்கில் அடையாளம் தெரியாத உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டது. இப்படி நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். ஜெர்மானியப் புரட்சி ரத்த வெள்ளத்தில் முடிவுக்கு வந்தது. 

நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, சூன் 1ல் லக்சம்பர்க் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது.

ரோசா குறித்து பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின்… 

“ரோசா நேசத்துக்குரியவராக உலகக் கம்யூனிஸ்டுகளின் நினைவில் இருப்பார். அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும், கம்யூனிஸ்ட்களின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகவும் பயனளிக்கும் பாடமாக இருக்கும்”.

Related Articles

2 Comments

  1. ரோசாவின் வீர தியாகத்தை மனதில் நிறுத்தி, உழைக்கும் உலக்மக்களின் நலனுக்காகப் போராடும் களத்தை இன்னும் திவீரப்படுத்துவோமாக..ந.சேகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button