ஏஐடியுசி தேசிய பொதுக்குழு கூட்டம் – சிவந்தது திருப்பூர்!

திருப்பூர் மாநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 முதல் 9 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. அப்போது திருப்பூர் மாநகரமே சிவப்பு வண்ணத்தால் காட்சியளித்தது. காணும் இடம் எங்கும் செங்கொடித் தோரணங்கள். மாநாட்டுப் பதாகைகள். மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் செந்தொண்டர் அணிவகுப்பு மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது.
அந்த நினைவுகள் மறையும் முன்பே மீண்டும் சிவந்தது திருப்பூர்.
இம்முறை தொழிலாளி வர்க்கத்தின் பாசறையான ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசிய கவுன்சில் கூட்டம் திருப்பூரில் செப்டம்பர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்றது. 21 ஆம் தேதி பகல் 2.00 மணிக்கு ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசிய தலைமை நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள எம்.கே.எம். ரிச் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், தேசிய செயலாளர்கள் டி.எம்.மூர்த்தி, வகிதா நிஜாம், சி.ஸ்ரீகுமார், மோகன் சர்மா, கிறிஸ்டோபர் ஃபோன்சியா, ஓப்லி, பாப்லி ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏஐடியுசி கொடியை மூத்த தோழர் தனலட்சுமி மில் தொழிலாளி செ.கி.ராமசாமி ஏற்றி வைத்தார். ஏஐடியுசி தேசியத் தலைவர் ரமேந்திர குமார், பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், தேசியச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, வகிதா நிஜாம், எஸ்எஸ்.காசிவிஸ்வநாதன், எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தியாகிகள் ஸ்தூபிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏஐடியுசியின் தலைவர் ரமேந்திர குமார் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் திருப்பூர் மாநகர துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஆகியோர் வரவேற்புரை நல்க பொதுக்குழு துவங்கியது.
கே.சுப்பராயன் எம்.பி, எம்.ரவி ஆகியோர் வழிகாட்டுதலில் வரவேற்பு குழு தலைவர், திருப்பூர் மாநகர துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், உணவுக் குழு உறுப்பினர்கள் மாமன்ற எஸ்.ரவிச்சந்திரன், ஆர்.செந்தில்குமார், காட்டே சி.ராமசாமி, விளம்பரக் குழு உறுப்பினர்கள் என்.சேகர், சி.பழனிசாமி, வி.எஸ்.சசிகுமார், மற்றும் மாமன்ற உறுப்பினர் எஸ்.செல்வராஜ், எம்.மோகன் கே.எம்.இசாக், ஏ.ஜெகநாதன், வி.ரவி, கே.சுரேஷ், கணேஷ் உள்ளிட்டோர் பணியாற்றினர்.
மணிபாரதி