கவிஞர் வாய்மைநாதன் மறைவுக்கு இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னணி படைப்பாளரான கவிஞர் வாய்மைநாதன் (87) இன்று (11-08-2023) காலை, அவரது சொந்த ஊரான வாய்மேட்டில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தோம்.
கவிஞர் வாய்மைநாதன் நல்ல ஆசிரியர். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்ல படைப்பாளி, சுபாஷ் சந்திர போஸ், களப்பால் குப்பு (எ) கே. குப்புசாமி போன்ற சமூக விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாறு உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமான உறவில் இருந்தவர். குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பற்றும், பாசமும் காட்டி கடைசி வரை பயணித்தவர்.
அன்னாரின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது வாழ்க்கை இணையர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு வழக்கறிஞர், ஆர்.முருகபாரதி, வேளாண்மை துறையில் பணியாற்றும் ஆர்.ஜீவானந்தம் ஆகிய இரு மகன்களும், ஆசிரியர் பணியில் உள்ள தமிழ் கோதை என்ற மகளும் இருக்கின்றனர்.
கவிஞர் வாய்மைநாதன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது
தங்களன்புள்ள,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்