ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கைக்கு எதிராக வடசென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம் சார்பாக 13.02.2023 அன்று மாலை 5.00 மணிக்கு பாரதி நகர் பெரம்பூரில் ஒன்றிய அரசின் உதவாக்கரை பட்ஜெட் மற்றும் அதானியின் ஊழல் விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் தோழர் ஜீ.சுப்ரமணி தலைமை தாங்கினார். பெரம்பூர் தொகுதி செயலாளர் தோழர் இரா.கோட்டி சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் ம. இராதாகிருஷ்ணன், ஏஐடியுசி வடசென்னை மாவட்ட தலைவர் தோழர் எம்.எஸ்.மூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, தோழர்கள் கீ.சு.குமார், A.சுப்பிரமணி மற்றும் டி.செண்பகம் ஆகிய முன்னணி தோழர்கள் கண்டன உரையாற்றினார்.
AISF மாநில துணைச் செயலாளர் தோழர் இரா.இராமசாமி நன்றியுரை ஆற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் தோழர் எம்.ஜெய்சங்கர், நிர்வாகக் குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.