துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்!
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பத்தினர்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்ப அங்கத்தினர்களுக்கு கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து பொருள்கள் அனுப்பி வைப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்திய அரசாங்கம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்துகிறது.