பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
ஒன்றிய அரசின் பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹீரா பென் மோடி (100) இன்று (30.12.2022) அதிகாலை, அகமதாபாத் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையுற்றோம்.
மனித வாழ்வில் நிறைவாழ்வு கண்ட ஹீராபென் அம்மையார் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையும் பெற்ற, பெருமைக்குரிய தயார். இவர்களில் நரேந்திர மோடி, அரசை வழி நடத்தும் அரசியலமைப்பு அதிகாரத்தில் பிரதமர் நிலைக்கு உயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்த ஹீராபென் மோடி மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரைப் பிரிந்து வாடும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.