மனிதகுல நல்வாழ்வுக்கான பொதுவுடைமை கொள்கையை உலகெங்கும் சேர்த்திட வேண்டும்! – AIPSO கருத்தரங்கில் இரா முத்தரசன் பேச்சு!
செய்தித் தொகுப்பு : இதழாளர் இசைக்கும்மணி
சென்னை: உலக ஏகாதிபத்தியமான அமெரிக்காவும், பாசிச அடக்குமுறைகளை ஏவிவிடும் இந்திய ஒன்றிய அரசும், உலகப்போர் மற்றும் மதக் கலவரங்களை ஏவி விட்டு, சமூக நல்லிணக்கத்தை ,மக்கள் ஒற்றுமையைத் தடுத்து நிறுத்தும் அரசியல் தந்திரங்களை கைக்கொண்டு, உலக சமநிலையை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
பொதுவுடைமை கொள்கையைக் கடைப்பிடித்திடும் அமைப்புகளும் நாடுகளுமே உலக சமாதானம், மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை மேலெடுத்து வருகிறது. ஆகவே, பொதுவுடைமை கொள்கையை உலகெங்கும் சேர்த்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேசினார்.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் கருத்தரங்கம் சென்னை கேரள சமாஜம் அரங்கில் டிச. 22 அன்று நடைபெற்றது. தமிழக அமைப்பின் தலைமை குழு உறுப்பினர்கள் பேராசிரியர் வெங்க டேஷ் ஆத்ரேயா மற்றும் கே. முத்தியாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் முன்னணி நிர்வாகியுமான தோழர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் மற்றும் ஐ. ஆறுமுக நயினார் தொடக்கவுரை நிகழ்த்தினர் .
உலக சமாதான கவுன்சிலின் தலைவரும், இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளருமான பல்லப் சென் குப்தா மற்றும் அருண்குமார் ஆகியோர் முறையே முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
மறைந்த தோழர் ரமேஷ் சந்திரா உலக சமாதான கவுன்சிலின் தலைவராக முன்னின்று மேம்படுத்தியுள்ள இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தை உலக சமாதானம், மத நல்லிணக்கம் மக்கள் ஒற்றுமைக்கான இயக்கமாக மேலும் செழுமை ப்படுத்திடுவோம் என 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக சமாதான கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல்லப்சென் குப்தா பேசினார். அவரை தொடர்ந்து அகில இந்திய பொதுச் செயலாளர் அருண்குமார் சிறப்புரையாற்றினார் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.
இரா முத்தரசன் பேசியதாவது: உலக சமாதானம், மத நல்லிணக்கம் , மத ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கம் இப்போதைய காலகட்டத்தின் அவசியமான ஒன்றாகும்.
உலகில் எப்போதும் போர் , மதத்தின் பெயரால் கலவரங்கள் என சமூகத் தை சீர்குலைத்து, மக்கள் ஒற்றுமை யை தடுத்து நிறுத்தும் அரசியல் தந் திரங்களை உலக ஏகாதிபத்தியமான அமெரிக்காவும் ,இந்திய பாசிச ஒன்றிய அரசும் கைக்கொண்டு, உலக சமநிலையை இந்திய அரசமைப்பை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது .
பொதுவுடமை சித்தாந்தங்களை உடைய அமைப்புகளும் ,நாடுகளுமே பசி, பட்டினி இல்லாத, நோய் நொடி இல்லாத, போர் இல்லாத சமாதான நல்லுலகை அமைந்திட வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.
“உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராது இயல்வது நாடு” என்கிறது நமது உலகத் திருமறை திருக்குறள் . “புதியதோர் உலகம் செய்வோம் ,கெட்ட போரிடும் உல கத்தை வேரோடு சாய்ப்போம், பொது வுடமை கொள்கையை உலகெங்கும் சேர்ப்போம் ” என்கிறார் பாரதிதாசன்.
போரில்லாத உலகில் தான் மக்கள் நிம்மதியாக சமாதானமாக இருக்க முடியும் என விழையும் பொதுவுடை மைக் கொள்கையை உலகெங்கும் சேர்த்திட வேண்டும் . பொதுவுடமை சமூகத்தில்தான் அணு ஆயுத உற்ப த்தி அற்ற போரில்லாத உலகம் அமைந்திட முடியும் .
முதலாளித்துவ பாசிச அரசியல் அடக்குமுறைகளை தலை தூக்க முடியாமல் செய்திட வேண்டும். சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக இந்தியாவை போற்றி பாதுகாத்திட இந்திய அர சியலமைப்புச் சட்டத்தையும் பாது காத்திட வேண்டும் என முத்தரசன் பேசினார் .
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது : மக்களிடையே சமூக விழிப்புணர்வு அற்றுப்போகவில்லை என்பதை இந்த கருத்தரங்க நிகழ்வு வலியுறுத்து வதாக இருக்கிறது.
சமூக சிந்தனை மனிதகுல வளர்ச்சி க்கு அவசியமானது . சமாதான சக வாழ்வு என்பது மனிதகுல நல்வாழ்வு க்கான உத்தரவாதம் ; ஆனால் நல் வாழ்வுக்கான இடமாக நமதுபூமி இல்லாமலிருக்க, உலக ஏகாதிபத்தி யங்கள் எப்போதும் உயிர் பறிக்கும் போர்க் கருவிகளை அணு ஆயுதங் களை உற்பத்தி செய்து அவைகளின் விற்பனை மூலம் மிகப்பெரிய லாபம் சம்பாதித்திட உலகில் ஏதாவது மூலை யில் போரை நடத்தி, மனித இனத்தை அழித்து வருகிறது . இயற்கையாக இறந்து போகக்கூடியவர்களை விட, இத்தகைய போரினால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்.
முதல் உலகப் போரில் ஒரு கோடி பேர் மடிந்தார்கள். இரண்டாம் உலகப்போரி ல் மூன்று கோடி பேராக இந்த எண்ணி க்கை உயர்ந்தது. இனி ஒரு போர் வந்தால் இப்போது இருக்கக்கூடிய அணு ஆயுதங்களால் மனித இனம் முழுமையும் பூண்டோடு அழிக்கப் பட்டு விடும்.
உலக நாடுகளின் ராணுவ செலவு இந்த 21ம் நூற்றாண்டில் 2 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. இந்த தொகையை கொண்டு உலகம் முழுமையும் உள்ள மக்களை பசி, பட்டினியில்லாமல் பல நூற்றாண்டு காலத்துக்கு பாதுகாத்திட முடியும்.
யுத்தமில்லா உலக சமாதான உலகம் உருவாக்கிட வேண்டும் என்று உலக மக்கள் அனைவரும் தங்களின் ஒரு மைப்பாட்டினை வெளிப்படுத்திட வேண்டும் என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த கூட்டத் திற்கு இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகத்தின் தமிழ் மாநில நிர் வாகக் குழு உறுப்பினர் டி. செந்தில் குமார் நன்றி தெரிவித்து பேசினார்.