தஞ்சாவூர் லீலாவதி அம்மா மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம், இராயமுண்டான்பட்டி தியாகி என்.வெங்கடாசலம் வாழ்விணையர் லீலாவதி அம்மா (85) நேற்று (28.11.2022) இரவு காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையுற்றோம்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டியமைத்த முன்னோடி தியாகி என்.வெங்கடாசலம். இவர் அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைக்குப் போராடிய நேரத்தில் வர்க்க எதிரிகளால் வெட்டிக் கொல்லப்பட்டவர். கணவரைக் களப்பலி கொடுத்தவர் லீலாவதி அம்மா.
இவர்களது மகன்களான வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், டாக்டர்.வெ. சுகுமார், என்.வி.கண்ணன் ஆகியோரும் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கை நெறி சார்ந்த குடும்ப வாழ்வு நடத்திய லீலாவதி அம்மா வாழ்வும் தியாகம் நிறைந்தது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.