சத்ய நாராயணியம்மாள் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
காலம் சென்ற விடுதலைப் போராட்ட வீரர் ஆர் ராதாகிருஷ்ண மூர்த்தியின் மனைவி திருமதி சத்ய நாராயணியம்மாள் (87) இன்று (08.11.2022) அம்பத்தூர் நியூ செஞ்சுரி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச்செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருமதி சத்ய நாராயணியம்மாள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர் ராதாகிருஷ்ணமூர்த்தியின் வாழ்விணையர். அவரது கட்சி வாழ்க்கை முழுவதும் சத்ய நாராயணியம்மாள் உறுதுணையாக இருந்தார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் ராதாகிருஷ்ணமூர்த்தி நீண்ட காலம் பணியாற்றியவர். பணியாளர்களிடம் பாசத்துடன் பழகியவர்.
பணியாளர்கள் கூட்டாக உருவாக்கிய நியூ செஞ்சுரி காலனியில் குடும்பத்தோடு வசித்து வந்தவர். சத்ய நாராயணியம்மாள் மறைவு பெரும் வேதனை அளிக்கிறது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
இவண்
இரா. முத்தரசன்
மாநிலச் செயலாளர்.