தோழர் ப. மாணிக்கம் என்ற பெயர், தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் என்றென்றும் நீடித்து நின்று நிலைபெற்று வாழும்! அவர், மண்ணுக்குள்ளேயே மறைந்து வாழ்ந்து, மண்ணை வளப்படுத்துகிற மண்புழு மாதிரி! கட்சியின் வெளி அரங்குகளில், பொதுவெளியின் விளம்பர வெளிச்சங்களில் தனது முகத்தை முன்நிறுத்த ஒருபோதும்விரும்பாதவர்! கட்சி அமைப்பிற்குள்ளேயே கட்சியின் அமைப்போடு அமைப்பாகவாழ்ந்து, கட்சி அமைப்பிற்குள்ளேயே தன்னைக் கரைத்துக்கொண்ட கட்சிஅமைப்பின் வித்தகர் அவர்! கட்சி அமைப்பிற்குள், லெனினிய நெறிமுறைகள் மீறப்படுகிற சம்பவங்களின்போது, அவரது தலையீடுகளும், பங்களிப்புகளும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் கற்றுணர்ந்து அதற்குத் தக நிற்க வேண்டிய கட்சி வரலாற்று அனுபவங்களாகும்! அவை ஒரு விரிவான புத்தகமாக எழுதப்பட வேண்டிய கட்சி வாழ்க்கையின் மதிப்புமிக்க அனுபவங்களாகும்! அந்த மகத்தான தளகர்த்தருக்கு, நூற்றாண்டு நிறைவு நாளில் எனது செவ்வணக்கம்! உங்களது வழிகாட்டலின்படி லெனினியத்தை உயர்த்திப்பிடிப்போம்!