தோழர்கள் கவனத்திற்கு…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் Rheumatologu Block பிரிவில் உள்ள 4 ஆம் தளத்தில் அறை எண் 546 இல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தோழர்களில் பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கலாமா? என கேட்டு வருகிறார்கள்.
கோவிட் 19 நோய்த்தொற்று பாதிப்புக்கு தனிமைப் படுத்திக் கொள்ளுதல் முதன்மை மருத்துவ அறிவுரையாகும். இதன்படி அவர் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
தோழர் இரா. முத்தரசன் அவர்களின் உடல் நிலை இயல்பாகவும், சாதாரணமாகவும் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனையில் கோவிட் 19 நோய்த்தொற்று சிறு அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்த்தொற்று நீக்கும் சிகிச்சைக்காக இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் ஆலோசனையாகும்.
தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு முழு ஓய்வு தேவை என்பதைத் தோழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு அவருடன் தொடர்பு கொள்வோர் மிகச் சுருக்கமாகப் பேசுவதைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
தோழமையுடன்
நா பெரியசாமி
மாநிலத் துணைச் செயலாளர்
23.10.2022