விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா பெரியசாமி Ex MLA உட்பட ஏராளமானோர் கைது!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் சட்ட அத்துமீறலுக்கு எதிராக நியாயம் கேட்டு, இன்று (24.09.2022) கிளியனூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் நா பெரியசாமி Ex MLA, மாவட்டச் செயலாளர் ஆ. செளரிராஜன், மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர்கள் எம் ஐ சகாபுதீன் உட்பட 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 25 பேர்.
தேற்குணம் பகுதியில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டோர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, உதவி ஆய்வாளர் (திரு வேலுமணி) எதிரிகளிடம் புனைவு புகார் பெற்று, பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு போட்டு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளார். இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.