முற்போக்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதி மரணம் – அனைத்திந்திய முற்போக்குப் பேரவை அஞ்சலி.
முற்போக்கு எழுத்தாளர் சின்னப்ப பாரதி மரணம் குறித்து அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று (14/06/2022) விடுத்துள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
மிகச்சிறந்த முற்போக்குச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் , நாவலாசிரியருமான கு. சின்னப்ப பாரதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
தனது எழுத்துக்களின் மூலம் முற்போக்குக் கருத்துக்களை தமிழக மக்களின் உள்ளங்களில் விதைத்தவர் சின்னப்ப பாரதி. தாகம், சர்க்கரை, சங்கம், பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா என்ற ஆறு புதினங்களைப் படைத்துள்ளார். அவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், மலையாளம்,
கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவரது மரணம் தமிழக மக்களுக்கும், முற்போக்கு இலக்கிய உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கு அனைத்திந்திய முற்போக்குப் பேரவையின் தமிழ்நாடு மாநிலக் குழு தனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய முற்போக்குப் பேரவை,
தமிழ்நாடு மாநிலக் குழு( AIPF)
All India Progressive Forum.
9940664343 / 9444181955