தெலங்கானா மாநிலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினாய் விஸ்வம் எம்.பி. கைது: தேசிய செயற்குழு கடும் கண்டனம்
தெலங்கானா மாநிலத்தில் தோழர் பினாய் விஸ்வம் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து சிபிஐ தேசிய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலங்கானா மாநிலக்குழு நடத்திவரும் நிலவுரிமைப் போராட்டத்தில் வாராங்கல் மாவட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தேசியக்குழு செயலாளர் பினாய் விஸ்வம் எம்.பி. கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் இயக்கங்களை நசுக்கிட நினைக்கும் தெலங்கானா அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டு கட்சி ஒருபோதும் அதன் போராட்டங்களின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்ளாது.
இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து கட்சியின் அனைத்து மாநில அணிகளும் போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுக்கப்படுகிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அறிந்தவுடன் பொதுச் செயலாளர் டி.ராஜா, கட்சியின் தெலங்கானா மாநில குழு செயலாளர் சத்தா வெங்கட்ட ரெட்டி மற்றும் பினாய் விஸ்வம் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.