மேகதாது அணை கட்டுமானம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழுக்களின் சார்பில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மக்களுக்கு பெரும் பாதிப்பு உருவாக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வரும் 2022, மார்ச் 26ஆம் (சனிக்கிழமை) தேதி காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ப.கருணாநிதி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், தோழர்களும் பங்கேற்கிறார்கள்.