அரசியல் கலாச்சார மாற்றத்தையே தோ்தல் முடிவு காட்டுகிறது!
புதுதில்லி, மார்ச் 11 – ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் உ.பி. உள்பட நான்கு மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி,, “5 மாநில தேர்தல் முடிவு கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம். 2024 தேர்தலின் முடிவு தற்போதைய உத்தரப்பிரதேச தேர்தல் முடிவு களிலேயே தென்படுகிறது” என்று புளகாங்கிதத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கூற்றை, பிரபல தேர்தல் வியூக வகுப்பாள ரான பிரசாந்த் கிஷோர் மறுத்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். “2022 தேர்தல் முடிவுகள், 2024-ஆம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ப தற்கான ஒரு முன்னோட்டம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2024-இல் நடக்கப் போவது ‘இந்தியாவுக்கான போர்’. அதை மாநில அளவிலான தேர்தல் முடிவுடன் ஒப்பிடக் கூடாது. இது சாகே புக்கும் (மோடிக்கு)தெரியும். அதனால்தான் மாநில தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்க்கட்சி களிடம் உளவியல் பாதிப்பை ஏற்படுத்த புத்திசாலித்தனமாக முயற்சி மேற்கொள் கிறார். மக்களிடையே, எதிர்க்கட்சிகள் மீது இருக்கும் அதிருப்தியை பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிதான் இந்த பேச்சின் பின்புலம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தவறான, பொய்யான வாதத் திற்கு யாரும் பலியாகி விட வேண்டாம். யாரும் இதை நம்பி விட வேண்டாம்’’ என கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.