பாஜகவுக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா தரலாம்..!
மும்பை, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கான வாக்குகளை பிரித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசிக்கும் ‘பாரத ரத்னா’ அல்லது ‘பத்ம விபூஷண்’ விருதுகள் வழங்கலாம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கிண்டலடித்துள்ளார். உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சி 125 இடங்களில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் காங்கிரஸ் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்து விட்டனர். எங்களுக்கு வாக்களித்திருந்தால் பாஜக-வைத் தடுத்திருப் போம். நாங்கள் பாஜகவின் ‘பி’ டீம் என திசைத் திருப்பும் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் தலித் வாக்குகள் பாஜக-வுக்கு விழுந்தது என்கின்ற னர். உண்மையில் தலித் வாக்குகள் எங்களி டம்தான் இருக்கிறது என்றார். இந்நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “உ.பி. தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் மாயா வதியும் ஒவைசியும்தான். ஆகையால் இந்த இரு வருக்கும் ‘பாரத் ரத்னா’ அல்லது ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கலாம். இந்த தேர்தலில் 3 மடங்கு இடங்களை கூடுதலாக பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எங்களது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.