உ.பி. தேர்தலில் பாஜக-வை சேர்ந்த அமைச்சர்கள் 10 பேர் தோல்வி!
லக்னோ, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்த லில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்து கொண்டாலும், தேர்தலில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் அமைச்சர்கள் 10 பேர் படு தோல்வி அடைந்துள்ளனர். இவர்களில் உத்தரப் பிரதேச துணை முதல்வரும், பொதுப்பணி, உணவுப் பதப்படு த்துதல் உள்பட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவருமான கேசவ பிரசாத் மவுரியாவும் ஒருவராவார். உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் வலதுகர மாக கருதப்பட்ட துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிராது தொகுதியில் போட்டி யிட்டார். அவருக்கு எதிராக சமாஜ்வாதி கூட்டணியில், அப்னாதளம் (கமேராவாதி) கட்சியின் தலைவர் பல்லவி படேல், நிறுத்தப் பட்டார். இந்நிலையில், பல்லவி படேலிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கேசவ் பிரசாத் மவுரியா தோற்றுப் போனார். மவுரியா மட்டுமன்றி, கரும்புத் துறை அமைச்சா் சுரேஷ் ராணா, வருவாய் துறை இணையமைச்சா் சத்ரபால் சிங் கங்கார், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜேந்திர பிரதாப் சிங், பொதுப் பணித்துறை இணைய மைச்சா் சந்திரிகா பிரசாத் உபாத்யாய, ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, விளையாட்டுத் துறை இணையமைச்சா் உபேந்திர திவாரி, ஆரம்பக் கல்வித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துவிவேதி மற்றும் ரன்வீா் சிங், லக்கான் சிங் ஆகிய பாஜக அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.