ஹிஜாப் போராட்ட மாணவியருக்கு காவிக் கும்பல் போனில் மிரட்டல்!
பெங்களூரு, பிப். 11 – கர்நாடகத்தில் ஹிஜாப் அணியும் உரிமைக்காக போராடி வரும் இஸ்லா மிய மாணவியரின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் செல்போன் எண் களை ‘வாட்ஸ்ஆப் குழு’க்களில் பகிர்ந்து, கொலைமிரட்டல் விடுக்கும் வேலைகளில் சங்-பரிவார் கும்பல் இறங்கியுள்ளது. இஸ்லாமிய மாணவியர்களின் தொலைபேசி எண் விவரங்களை, சம்பந் தப்பட்ட பிரி யுனிவர்சிட்டி கல்லூரி நிர்வா கமே, சங்-பரிவார் தரப்புக்கு கசியவிட்ட தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ‘தி குவிண்ட்’ (The Quint) ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. அதில், “உடுப்பியில் உள்ள அரசு பிரி யுனிவர்சிட்டி (Pre-University) கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகளின் எண்கள் கசிய விடப்பட்டு உள்ளன. இந்த கல்லூரியில் படிக்கும் அலியா அஸாதி உள்ளிட்ட பல இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ள நிலையில், இவர்களின் போன் எண்கள், விலாசம், புகைப்படம் அடங்கிய கல்லூரி அப்ளிகேஷன் லீக் செய்யப்பட்டுள்ளது. ‘வாட்ஸ் ஆப்’ மூலம் பல இந்துத்துவா குழுக்களில் இந்த எண்கள் கசிய விடப்பட்டுள் ளன” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கசிய விடப்பட்ட இந்த விவ ரங்கள் அடங்கிய கல்லூரி அப்ளி கேஷனில் கல்லூரியின் முத்திரை யும் உள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கு உள்ளே இருந்து தான் யாரோ இந்த விண்ணப்பத்தை வேண்டுமென்றே கசிய விட்டிருக் கிறார்கள் என்று தெரிவதாகவும் ‘தி குவிண்டில்’ கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவியர் மட்டுமன்றி அவர்களது பெற்றோரின் தொலைபேசி எண்களும் கசிய விடப்பட்டுள்ளன. உடுப்பி பிரி யுனிவர்சிட்டி கல்லூரி யின் வளர்ச்சிக் குழு (Development Committee) தலைவராக இருப்பவர் பாஜக எம்எல்ஏ ரகுபதி பாட் என்ற நிலையில், அவரின் அழுத்தத்தின் பெயரில் இந்த சம்பவம் நடந்து இருக்க லாம் என்று மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இவர் கடந்த ஓராண்டாகவே இஸ்லாமிய மாணவி யர் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வந்த தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கசியவிடப்பட்ட எண்கள் மூலம் எங்களுக்கு மிரட்டல் வருகிறது. கொரோனாவையொட்டி, ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கப்பட்ட செல்போன்கள், தற்போது சங்-பரிவாரின் மிரட்டலுக்கு தோதாகி விட்டது என்று மாணவி அலியா ஆஸாதி குறிப்பிட் டுள்ளார். தங்களின் புகைப்படங்களையும் ‘வாட்ஸ் ஆப்’பில் பரப்பி வருகிறார்கள் என்று கூறும் அவர், “இனியும் எங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா, என்பது அச்சமாக உள்ளது. எனக்கு அடிக்கடி மிரட்டல் போன் கால் வரு கிறது. எனக்கு நிறைய கனவு இருந்தது. போட்டோகிராபர் ஆக வேண்டும். காடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் இப்போது அது எல்லாம் நடக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எங்களை யாராவது தாக்குவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது” என்று அவர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.