அமிர்தம் மோடியின் நண்பர்களுக்கு விஷம் நாட்டின் மக்களுக்கு..!
ஆர்ஜேடி எம்.பி. சாடல்
புதுதில்லி, பிப். 11 – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது ‘அமிர்த காலத்திற் கான பட்ஜெட்’ என்று மோடி அரசு கூறுகிறது, ஆனால், மக்களுக்கு என்ன வோ விஷம்தான் கிடைத்துள்ளது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று மனோஜ் குமார் ஜா உரையாற்றினார். அப்போதுதான் இவ்வாறு அவர் கூறியுள்ளார். “2022-23 நிதியாண்டிற் கான பட்ஜெட்டை, ‘அமிர்த காலத்திற் கான பட்ஜெட்’ என அரசாங்கம் கூறி யுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டு களில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, யாருக்கு அமிர்தம் கிடைக்கிறது? யாரு க்கு விஷம் கிடைக்கிறது? என்பது தெளிவாகவே தெரிகிறது. அமிர்தம் (பிரதமர் மோடியின்) நண்பர்களுக் கானது. அது போதுமான அளவு வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் விஷத்தை மட்டுமே பெறுகிறார்கள்” என்று ஜா சாடியுள்ளார். “அரசிடம் வேலைவாய்ப்பை உரு வாக்குவதற்கான எந்த தொலை நோக்குப் பார்வையும் இல்லை” என்று கூறியிருக்கும் ஜா, “வேலை யில்லாத இளைஞர்களின் பொறுமை மெதுவாக குறைந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல பிஜூ ஜனதாதளம் கட்சி எம்.பி. சுஜீத் குமார். “பட்ஜெட் டில் விலைவாசி உயர்வு அல்லது பண வீக்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்திற் கான பட்ஜெட் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்ளது. நாம் கல்வி யைப் பற்றி உயர்ந்த விஷயங்களைப் பேசுகிறோம். ஆனால் எவ்வளவு உயர்ந்த இலக்குகள் இருந்த போதி லும், கல்விக்காக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சத விகிதத்தை மட்டுமே செலவிடு கிறோம்” என்று விமர்சனங்களை வைத்துள்ளார்.