3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இந்தியர்கள் தற்கொலை!
நாடாளுமன்றத்தில் மோடி அரசு ஒப்புதல்
புதுதில்லி, பிப்.10- கடன் மற்றும் வேலையின்மை கார ணமாக, 2018 முதல் 2020 வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மோடி அரசே நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. இதில், 9 ஆயிரத்து 140 பேர் வேலை யின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாக வும் தற்கொலை முடிவை எடுத்திருக் கின்றனர் என்றும் கூறியுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வழங்கிய தரவுகளின் அடிப்ப டையில், இதுதொடர்பான புள்ளிவிவ ரங்களை மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்துள ளார். அதில், “2020-ஆம் ஆண்டில் தொற்றுநோய் காலத்தின் போது வேலையில்லாதவர்கள் தற்கொலை கள் செய்வது அதிகரித்துள்ளது. 2018- இல் 2 ஆயிரத்து 741 பேரும், 2019-இல் 2 ஆயிரத்து 851 பேரும், அதிகபட்ச மாக 2020-இல் 3 ஆயிரத்து 548 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடன் மற்றும் திவால் காரணமாக 2018-ல் 4 ஆயிரத்து 970 பேர், 2019-இல் 5 ஆயிரத்து 908 பேர், 2020-இல் 5 ஆயி ரத்து 213 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்று கூறப்பட் டுள்ளது. மேலும், “மனநல ஆலோசனை வழங்குதல் மற்றும் வேலை வாய்ப்பு களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. நாட்டின் 692 மாவட்டங்களில், ‘தேசிய மன நல திட்டம்’ (NMHP), மாவட்ட மனநலத் திட்டத்தை (DMHP) அரசு செயல்படுத்தி யுள்ளது. இந்த திட்டம் தற்கொலை தடுப்பு சேவைகள், பணியிட அழுத்த மேலாண்மை, வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆலோசனை வழங்குவதை நோக்க மாகக் கொண்டுள்ளது” என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.