2021ல் மட்டும் 108 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் 6 பேர் படுகொலை இந்தியாவில் மோசமாகி வரும் பத்திரிகை சுதந்திரம்
புதுதில்லி, பிப். 4 – உரிமைகள் மற்றும் இடர் பகுப்பா ய்வுக் குழு, (Rights and Risks Analysis Group – RRAG) என்ற அமை ப்பானது, இந்தியாவில் நிலவும் ஊடக சுதந்திரம் தொடர்பாக, ஆய்வு செய்து `இந்திய பத்திரிகைச் சுதந்தி ரம் அறிக்கை – 2021’ (India Press Freedom Report 2021)-ஐ வெளி யிட்டுள்ளது. அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு, இந்தியாவில் 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 108 பத்திரிகையாளர்கள் தாக்கப் பட்டுள்ளனர், 13 ஊடக நிறுவனங்கள் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. மேலும் அது கூறியிருப்பதாவது: இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங் களில் அதிகளவில் பத்திரிகையா ளர்களும், ஊடக நிறுவனங்களும் கடந்த ஆண்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.
2021-ஆம் ஆண்டில், 121 பத்திரி கையாளர்கள் மற்றும் ஊடக நிறு வனங்களில், குறைந்தது 34 பத்தி ரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறு வனங்கள், அரசு சார்பற்ற நடிகர்கள், முக்கியமாக அரசியல் கட்சி ஆர்வல ர்கள், மாபியா மற்றும் ஆன்லைன் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். 6 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். குறைந்தது 28 பத்திரிகை யாளர்கள் மற்றும் ஊடக நிறு வனங்கள் உடல்ரீதியாக தாக்கப் பட்டனர் அல்லது துன்புறுத்தப் பட்டனர் அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். உயிரிழந்த 6 பத்திரிகையா ளர்களுள் தலா 2 பேர் விகிதம் மொத்தம் 4 பேர், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு பத்திரிகையாளர் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, பல்வேறு மாநி லங்களில் 44 ஊடகவியலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் பலர் மீது ஒன்று க்கும் மேற்பட்ட வழக்குகள் தொட ரப்பட்டுள்ளன.
அதிகளவிலான வழக்குகள் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன. 44 பத்திரிகையாளர் களுள் 21 பத்திரிகையாளர்கள் விரோதத்தை வளர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது 153ஆம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பத்திரிகை யாளர்களில் 8 பேர் பெண் பத்திரிகை யாளர்கள் என்ற நிலையில் அவர் களும் கைது, சம்மன், வழக்குப் பதிவு முதலான ஒடுக்குமுறைகளை எதிர் கொண்டனர். நாட்டிலேயே அதிகபட்சமாக- ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஜம்மு – காஷ்மீரில் 25 ஊடக நிறு வனங்களும், பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களான உத்தரப் பிரதேசத் தில் 23 ஊடக நிறுவனங்கள், மத்தியப் பிரதேசத்தில் 16 ஊடக நிறுவனங் கள், திரிபுராவில் 15 ஊடக நிறு வனங்கள், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தும் தில்லியில் 8 ஊடக நிறு வனங்கள், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கும் பீகாரில் 6 ஊடக நிறுவனங்கள், பாஜக ஆட்சி நடத்தும் அசாமில் 5 ஊடக நிறு வனங்கள், ஹரியானா மற்றும் மகா ராஷ்டிராவில் தலா 4 நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தால் தாக்கு தல் மற்றும் மிரட்டலுக்கு உள்ளாக்க ப்பட்டன.
இதேபோல கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநி லங்களில் தலா 2 ஊடக நிறுவனங் களும், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ் கர், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 1 ஊடக நிறுவனங்களும் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு, சுமார் 24 பத்திரிகையாளர்கள் தாக்கப் பட்டும், மிரட்டப்பட்டும், அச்சுறுத்தப் பட்டும், தங்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டும் உள்ளனர். இந்த 24 பத்திரிகையாளர்களுள் 17 பேர் காவல்துறையினரால் தாக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பத்திரிகையாளர்களை, காவல்துறையினர் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கிய நிகழ்வுகள் அதிகளவில் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்துள்ளது.
2021-ஆம் ஆண்டில், அம லாக்க இயக்குநரகம் மற்றும் வரு மான வரித்துறை ஆகியவை அரசாங் கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக நிறுவனங்கள்-செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகையா ளர்களின் வீடுகளின் அலுவலகங் களில் சோதனை நடத்தியது. 2021 பிப்ரவரியில் ‘நியூஸ்க்ளிக்’, ஜூலையில் ‘தைனிக் பாஸ்கர்’ மற்றும் ‘பாரத் சமாச்சார்’ மற்றும் செப்டம்பரில் ‘நியூஸ்லாண்ட்ரி’ உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் சோத னைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. `ஜம்மு காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பத்திரிகை சுதந்திரம் மீதான அடக்குமுறையே, நாட்டில் குறைந்து வரும் ஜனநாயக வெளியைக் குறிக்கிறது’ என்று ஆர்ஆர்ஏஜி (RRAG) அமைப்பின் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.