இந்தியா
தமிழக எம்.பி.யின் கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஒன்றிய அமைச்சர்
புதுதில்லி,பிப்.4- நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் துணைக்கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியும். அவர் இந்தியில் பேசுவது தமிழக எம்.பி.க்களை அவமதிக்கும் செயல்” என்று கண்டித்தார். குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இதில் எந்த அவமதிப்பும் இல்லை” என சமாளித்தார்.