ஆளுநரைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு
சென்னை,பிப்.4- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மக்க ளவையில் திமுக,காங்கிரஸ்,இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். வெள்ளியன்றும் மாநிலங்களவையிலு தமிழக எம்பிக்கள் ஆளுநரைக் கண்டித்து முழக்கம் எழுப்பி,வெளிநடப்பில் ஈடுபட்ட னர். மாநிலங்களவையில் பிப்ரவரி 4 வெள்ளியன்று ஆளுநரின் நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் “தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது” என மாநிலங்களவை தலைவர் தெரிவித்தார். இதனால் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா, இந்திய முஸ்லிம் லீக் எம்பிக்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.