அமெரிக்கக் கடத்தல் தொடர்கிறது
டமாஸ்கஸ், ஜன.28- சிரியாவில் இருந்து சர்வதேச சட் டங்களுக்கு விரோதமாக இராக் வழியாக எண்ணெய் கடத்துவதை அமெரிக்க ராணுவம் மீண்டும் மேற்கொண்டுள் ளது. ஜனவரி 26 ஆம் தேதியன்று, 130 எண்ணெய் லாரிகள் மூலமாக எண்ணெய் கொண்டு செல்லப்பட்டி ருக்கிறது. இந்த வண்டிகளைக் கொண்டு செல்வதற்காக சட்டவிரோ தமாக ஒரு பாதை ஒன்றையும் உரு வாக்கியிருக்கிறார்கள். இராக்கின் அல் வாலித் பகுதியில் உள்ள மஹ் முதியா என்ற கிராமம் வழியாக இந்தக் கடத்தல் வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசுத் தரப்பில் வெளியாகியுள்ள செய்தியின்படி, இந்தக் கடத்தல் வேலைகளுக்கு சிரிய அரசுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கும் சிரிய ஜனநாயகப் படைகள் என்ற அமைப்பு துணையாக இருக்கிறது.
இவர்களின் உதவியுடன்தான் சிரியா வின் எண்ணெய் வயல்களிலிருந்து எண்ணெய் திருடப்பட்டு, சிரியா-இராக் எல்லை வழியாக சர்வதேச சட்டங்களுக்கு எதிரான வகையில் கடத்திச் செல்லப்படுகிறது. ஜனவரி 26 அன்று காலையிலேயே இராக்கின் மஹ்முதியா கிராமத்தின் வழியாக சிரியாவுக்குள் 46 வண்டி கள் நுழைந்தன. 130 எண்ணெய் லாரி கள் மூலமாக எண்ணெய் கடத்திச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, எதிர் திசைகள் இந்த 46 வாகனங் கள் சிரியாவிற்குள் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்க ளோடு கொண்டு வரப்பட்டன. மீண்டும் எண்ணெய் கடத்தலை மேற்கொள்ளவே இந்த வாகனங்கள் சிரியாவுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. கடந்த வாரத்தில் 111 எண்ணெய் லாரிகள் மூலமாகக் கடத்தல் வேலை மேற்கொள்ளப்பட்டது.
ஜனவரி 3 ஆம் தேதியன்று 128 எண்ணெய் லாரிகள் கடத்திச் சென்றன. இந்த இரண்டு முறையும் அமெரிக்க ராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன்தான் கடத்தல் வேலைகள் நடைபெற்றன. பயங்கர வாதிகளை எதிர்க்கவே சிரிய மண்ணில் தங்கள் படைகள் இருக் கின்றன என்று அமெரிக்கா சொல்லி வந்தாலும் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பதே பிரதான வேலை யாக இருந்து வருகிறது. அமெரிக்க ராணுவம் சிரிய மண்ணில் இருப்பது சட்டவிரோதம் என்று சிரிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி யாக இருந்தபோது, சிரியாவில் அமெ ரிக்க ராணுவம் இருப்பது அந்நாட்டின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து தான் என்று வெளிப்படையாகப் பல முறை குறிப்பிட்டிருந்தார்.