ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதியில் பார்டி
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொட ரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங் கனையும், உள்ளூர் நாயகியுமான ஆஸ்திரேலியாவின் பார்டி, அதிரடி வீராங்கனை அமெரிக்காவின் மேடிசன் கீஸை 6-1, 6-3 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறினார். 25 வயதாகும் பார்டி இதுவரை பிரெஞ்சு (2019), விம்பிள்டன் (2021) ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் : இன்றைய ஆட்டங்கள்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளியன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பெரர்ட்டினி (இத்தாலி) – நடால் (ஸ்பெயின்) – காலை 9 மணிக்கு, இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சிட்ஸிபாஸ் (கிரீஸ்) – மெத்வதேவ் (ரஷ்யா) – மதியம் 2 மணி.