உலக நிதிமூலதனத்தின் ஆயுதமான அடையாள அரசியலை எதிர்த்து லெனினிய ஒளிக்கீற்றில் போராட சபதம் ஏற்போம்! – மாமேதை லெனின் நினைவு நாளில் கே சுப்பராயன் சூளுரை
தோழர் லெனின் நினைவு நாள் இன்று!
20-ம் நூற்றாண்டு மார்க்சிசமாக வளர்ச்சி பெற்றதன் அடையாளமே லெனினிசம்!
மார்க்சியம் மனித சமுதாயம் குறித்த விஞ்ஞானமாகும்! விஞ்ஞானத்திற்கு எல்லைக் கல் கிடையாது! அது வளர்ந்து கொண்டிருப்பதாகும்! அது பிறந்தது முதல் இன்றுவரை அதை அழிப்பதற்கான ‘திருப்பணிகளை’, மனித உழைப்பை மனிதன் சுரண்ட வாய்ப்பளிக்கிற சுரண்டல் சமூக அமைப்பு, மேற்கொண்டே வருகிறது! அதனுடைய ஒரு வடிவம்தான் பின்நவீனத்துவமாகும்! அது பெற்றெடுத்த விஷம விருட்சம்தான் அடையாள அரசியலாகும்!
இன்றைய பேராபத்து, உலக சமூகத்தின் மீது உலக நிதிமூலதனம் தொடுத்து வருகிற மக்கள் விரோத சேட்டைகளாகும்! உலக சமுதாயத்தை ஒரு முகப்படுத்தினால் மட்டுமே உலக நிதி மூலதனத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும்!
மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியைத் தடுத்து பிளவுபடுத்துவதற்கான உலக நிதிமூலதனத்தின் ஆயுதம் தான் அடையாள அரசியல்! இதை எதிர்த்து லெனினிய ஒளிக்கீற்றில் போராட சபதம் ஏற்போம்!
கே.சுப்பராயன் MP