2021 டிசம்பரில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1.60 லட்சம் கோடி!
புதுதில்லி, ஜன.15- 2021 டிசம்பரில், நாட்டின் ஏற்று மதி – இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள் ளது. எனினும் வர்த்தகப் பற்றாக் குறை நீடிக்கிறது. இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்களை ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2021 டிசம்பர் மாதத் தில் இந்தியா மொத்தம் 37.81 பில்லி யன் டாலர் (சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்)மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 38.91 சதவிகித வளர்ச்சியாகும். பொறி யியல் சாதனங்கள், ஜவுளி, ரசாய னம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட ஏற்றுமதி அதிகரிப்பே இதற்குக் கார ணமாகும். அதேநேரம், இறக்குமதியும் 2021 டிசம்பரில் 59.48 பில்லியன் டாலர் (ரூ. 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி) அள விற்கு உயர்ந்துள்ளது. இது 38.55 சதவிகித வளர்ச்சியாகும். ஏற்றுமதி – இறக்குமதி வர்த்த கத்திற்கு இடையிலான வித்தி யாசமே வர்த்தகப் பற்றாக்குறை என்ற வகையில், 2021 டிசம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை 21.68 பில்லியன் டாலராக (சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையி லான 9 மாதங்களில் இந்தியா மொத் தம் 301.38 பில்லியன் டாலர் மதிப்பி லான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2020-ஆம் ஆண் டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்க ளில் நடந்த ஏற்றுமதியை விட 49.66 சதவிகிதம் அதிகமாகும். இதே போல இறக்குமதி மதிப்பும், இந்தக் காலத்தில், கடந்த ஆண்டைவிட 68.91 சதவிகித வளர்ச்சியுடன் 443.82 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்த கப் பற்றாக்குறை ஒட்டுமொத்தமாக கடந்த 9 மாதங்களில் 142.44 பில்லி யன் டாலராக (சுமார் 10 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய்) அதி கரித்துள்ளது.