மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் காலமானார்
சென்னை, ஜன. 15 – மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரை ராஜ் உடல் நலக்குறைவால் சனிக்கி ழமையன்று (ஜன.15) திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 70. திருச்சி பொன்மலையில் பிறந்த துரைராஜ் இளம் வயதிலேயே இடது சாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். சமூக அக்கறைக் கொண்ட பத்திரி கையாளராக 41 ஆண்டுகள்பெரும் பங்க ளிப்பைத் தந்தவர் மூத்த பத்திரிகை யாளர் எஸ்.துரைராஜ். பத்திரிகை யாளர்களின் குரல் நசுக்கப்படும் கால ங்களில் அடக்குமுறைக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்தவர். பத்திரி கையாளர் நலன்களுக்கு தொடர்ந்து பாடுபட்டவர். சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆகிய அமைப்புகளில் பல்வேறு பொறு ப்புகளை வகித்தவர் தோழர் எஸ்.துரைராஜ். புற்று நோயால் பாதிக்கப் ்பட்ட அவர் உடல் நலம் குன்றி கால மானார். மிக எளிமையான மனிதராக திகழ்ந்த எஸ்.துரைராஜ், பிடிஐ, நியுஸ்டுடே, தி இந்து, ஃப்ரண்ட்லைன்’ உள்ளி ட்ட செய்தி ஊடகங்களில் பணி யாற்றியவர். விளிம்பு நிலை மக்களுக் ்காக தனது எழுத்தின் மூலம் பாடுபட்டவர். அன்னாரது இறுதி நிகழ்வு ஞாயிறன்று (ஜன.16) காலை 10 மணி அளவில், எண்.786, 16, குறுக்குத்தெரு, வாசன் வேலி, வயலூர் ரோடு, திருச்சி 620 102 என்ற முகவரியில் தொடங்கி ஒ.எம்.ஆர். மயானத்தில் உடல டக்கம் நடைபெறுகிறது.
சிபிஐ இரங்கல்
“நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடகப் பணியாற்றிய எஸ்.துரைராஜ் எழுதிய செய்திக் கட்டு ரைகள் உழைக்கும் மக்களின் உணர்வை பிரதிபலிக்கும். நாட்டின் ஒற்றுமை க்கும், ஒருமைப்பாட்டுக்கும் குரல் கொடுக்கும். சாதி, மதவெறி சக்திக ளுக்கு எதிரான போர்க்குரலாக ஒலிக் ்கும். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “துரைராஜ் மறைவுக்கு பத்திரிக்கை உலகிற்கும், இடதுசாரி இயக்கத்திற் ்கும் பேரிழப்பு” என்று குறிப்பிட்டுள் ்ளார், “மனிதர்களிடம் எவ்வித பாகு பாடும் இல்லாமல் மிகுந்த மரியாதை யுடனும் அன்புடனும் பழகியவர். அன்னாரது மறைவிற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத் ்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருசோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயதிலேயே இடது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப் ்பட்டாலும், பத்திரிகை துறையில் கால்பதித்து தனது சிறப்பான சேவை களால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரி கையார்களிடம் நற்பண்பைபெற்ற அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதவை” என்று தெரிவித்திருக் ்கிறார்.