‘குறளோவியம்’போட்டி: முதல்வர் பரிசு!
சென்னை, ஜன.15 – திருக்குறளின் சிறப்பினை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்கள், முற்றோதல் செய்யும் மாணவர் களைப் பாராட்டி குறள் பரிசுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 10 ஆயிரம் ரூபாய் குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. ‘குறளோவியம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு, குறட்பாக்களின் செம்மாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவிலான ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் திருவள்ளுவர் திருநாளான சனிக்கிழமையன்று (ஜன.15) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ‘குற ளோவியம்’ ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசு களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, தங்கம் தென்னரசு, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, த.மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.