ஜன.31 இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம்
புதுதில்லி, ஜன.15- 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி துவங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெற உள் ளது. ஜனவரி 31ஆம் தேதியிலி ருந்து பிப்ரவரி 11 வரை முதல்கட்ட மாகவும் மார்ச் 10 ஆம் தேதியிலி ருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதி கூட்டத்தொடரில் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக் கல் செய்யவுள்ளார். நிகழாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31 அன்று காலை 11 மணிக்கு நாடா ளுமன்றத்தின் இருஅவைகளை யும் இணைத்து குடியரசுத் தலை வர் உரையாற்றுகிறார். முன்னதாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்கள வைச் செயலகத்தில் பணிபுரியும் 65 ஊழியர்கள், மக்களவைச் செய லகத்தில் பணிபுரியும் 200 ஊழி யர்கள், மற்ற பிரிவுகளில் பணி யாற்றும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகவும் மக்களவைச் செய லகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.