உ.பி. மாநிலத்தில் அரங்கேறிய கொலைவெறி பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டிய காங். தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!
லக்னோ, ஜன.6- உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டிய காங்கி ரஸ் தலைவர் அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள் ளார். சுல்தான்பூர் மாவட்டம், லாலு கா பூர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா யாதவ். சமாஜ் வாதி கட்சியில் இருந்த ரீட்டா யாதவ், கடந்த மாதம், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிர சில் இணைந்தார். சுல்தான்பூரில் நவம்பர் 16 அன்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடியும் காட்டினார். இதற்காக ஒருவாரம் சிறையில் இருந்த பின் ஜாமீனில் அவர் விடுதலையானார். இந்நிலையில், ரீட்டா யாதவ், செவ்வா யன்று லக்னோ – வாரணாசி நெடுஞ்சாலை யில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ரீட்டா யாதவும், கார் ஓட்டுநர் முஸ்தகீம் (50) என்பவரும் படு காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், லம்ஹூவா காவல்நிலைய போலீசார், அடையாளம் தெரியாத 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை யாரையும் கைது செய்ய வில்லை.