இந்துத்துவா கூட்டம் ஏட்டிக்குப் போட்டி! ஹிஜாப்புக்கு எதிராக காவித்துண்டு அணிவோம்
பெங்களூரு, ஜன.6- இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவது போல, நாங் கள் காவித்துண்டு அணிவோம் என்று இந்துத்துவா ஆதரவு மாண வர்கள் சிலர், கர்நாடகத்தில் ஏட் டிக்குப் போட்டி வேலையில் இறங்கியது சர்ச்சையாகியுள்ளது. இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப், புர்கா அணிவது வழக்க மாக உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாலகாடியிலுள்ள அரசுக் கல்லூ ரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அந்த கல் லூரியின் முதல்வர் ருத்ரா கவுடா அனுமதி அளிக்கவில்லை. ஹிஜாப் அணிந்து வந்த மாண விகளை கல்லூரிக்குள் அனு மதிக்கவில்லை. எனினும், கல்லூரி முதல்வ ரின் தடைக்கு எதிராக மூன்று நாட்களாக வகுப்பறைக்கு வெளியே நின்று போராடிய இஸ்லாமிய மாணவிகள், முடி வில் தங்களின் கோரிக்கையில் வெற்றி பெற்றனர். மாவட்ட ஆட்சி யர் இப்பிரச்சனையில் தலை யிட்டு, ஹிஜாப் அணிந்து வகுப்ப றைக்கு வர அனுமதி அளித்தார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவா ஆதரவு மாணவர்கள், நாங்களும் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வருவோம் என்று பிரச்சனையை ஆரம்பித்துள்ளனர். இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணிய அனுமதித்தால், நாங்கள் காவித் துண்டு அணிவோம் என்று ஏட்டிக்குப் போட்டியாக கூறியது டன், அதன்படியே காவித்துண்டு அணிந்து வந்துள்ளனர். இதையடுத்து, ஜனவரி 10-ஆம் தேதிக்குப் பிறகு, பெற் றோர்கள், மாணவர்களை அழைத்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விவகா ரத்துக்கு சுமூக தீர்வு ஏற்படுத்தப் படும் என கல்லூரி நிர்வாகம் கூறி யுள்ளது.