பஞ்சாப் அரசின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை!
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம்
சண்டிகர், ஜன.6- “பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது மாநில அர சின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த குளறுபடியும் இல்லை” என்று அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிர தமர் நரேந்திர மோடி புதனன்று அங்கு சென்றிருந்தார். முன்னதாக, ஹூச யின்வாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவ தும் அவரது திட்டமாக இருந்தது. இதற்காக ஹெலிகாப்டரில் பய ணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பிர தமர் மோடி, வானிலை காரணமாக திடீ ரென அந்த முடிவை மாற்றிக் கொண்டு, சாலை மார்க்கமாக காரில் பயணித்தார். ஆனால், வழியில் ஹூசயின்வாலாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில், பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் 4 பேர் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். இதனால் பிரதமர் மோடி தொடர்ந்து பயணிக்க முடியாமல், சுமார் 20 நிமி டங்கள் மேம்பாலத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர், பயணத்தை ரத்து செய்து விட்டு, பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பினார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், பஞ்சாப் அரசு தனக்குரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்பதை, “பதிண்டா விமான நிலையம் வரை என்னை உயி ரோடு அனுப்பி வைத்ததற்கு உங்கள் முதல்வருக்கு எனது நன்றியைச் சொல்லி விடுங்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டு விட்டு தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டி லும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்ட தில்லை” என்றும், “இந்தக் குறைபாட் டுக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பஞ்சாப் அரசை, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. பஞ்சாப் அரசும், பிரதமர் மோடிக் கான பாதுகாப்பில் விதிமீறல் ஏற் பட்டதா? என்று விசாரிக்க, பஞ்சாப் மற் றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக்குழு 3 நாட்களுக் குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பான மனு ஒன்று வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, “பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுத்தியதற்காக, நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை மன் னிப்பு கேட்க வேண்டும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இவ்விவகாரத்தை அரசியலாக்கினார். “சரண்ஜித் சிங் சன்னி தலைமை யிலான அரசு சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யத் தவறிவிட்டதால், பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று பாஜக கூட்டணியில் இருக்கும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அம்ரீந்தர் சிங் ஒருபடி மேலே சென்றார். “காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இன்று அவர்கள் நாட்டின் பிரதமருக்கே தீங்கு விளைவிக்க முயற்சித்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வகை யில், பிரதமருக்கு காயம் ஏற்படுத்தக் கூடும் என நன்கு தெரிந்தே மாநில அரசு இதுபோன்ற சூழ்நிலையை உரு வாக்கி உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொந்த ளித்தார். “பிரதமர் செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் எப்படி வந்தார் கள்?” என்றும் அவர் கேள்வி எழுப்பி னார். இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசுத் தரப்பில் குளறுபடி ஏதும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார். “பிரதமர் முதலில் ஹெலிகாப்டரில் செல்வதற்குத்தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் பயணம், சாலை மார்க் கத்திற்கு மாறி விட்டது. அனைத்து பாது காப்பு ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு தான் மேற்கொண்டது.
பிரதமர் செல்லும் பாதையில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயி கள். அவர்கள் வன்முறையின்றிதான் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு முன்பாகவே பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்டு விட்டது. தாக்கு தல் நடத்தும் சூழ்நிலையும் இல்லை. அவ்வாறிருக்கையில் விவசாயிகள் மீது காவல்துறையை ஏவ முடியாது. எந்தப் போராட்டத்தையும் கைவிட வைக்க குறைந்தது 10 முதல் 20 நிமி டங்கள் ஆகும் என்ற நிலையில், இது குறித்து பிரதமருக்குத் தெரிவிக்கப் பட்டது. மேலும் அவருக்கு வேறு மாற்று வழியும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவர் திரும்பிச் செல்வதை தேர்வு செய்துள்ளார். இங்கு ஜனநாயக அமைப்பும், கூட்டாட்சி முறையும் உள்ளது. பிரதமர் மோடி எங்களின் பிரதமர், இந்த நாட்டின் பிரதமர். பிரதமரின் பாதுகாப்புக்காக நான் ரத்தம் கூட சிந்தியிருப்பேன். ஆனால், பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்த குறைபாடும் இல்லை. பிரதமர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரி வித்துக் கொள்கிறேன். இந்த விஷ யத்தை வைத்து பாஜக அரசியல் செய்யக் கூடாது.” இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி கூறி யுள்ளார். இதனையே பெரோஸ்பூர் டிஐஜி இந்தர்பீர் சிங்கும் கூறியுள்ளார். “பிரதமர் வரும் சாலையில் திடீரென 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி விட்டனர். பிரதமரின் கார் நின்றிருந்த பாலம் பகுதியில் மேலும் திரளாக விவ சாயிகள் கூட ஆரம்பித்ததால், பிரத மரை மீண்டும் பதிண்டா விமான நிலை யத்திற்கே திரும்ப அழைத்துச் செல்லும் முடிவு எடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த இடத்தில் மட்டுமல்லாமல் தரன் தரன், பரீத்கோட், அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் போராட்டத் தில் இறங்கினர்” என்று தெரிவித்துள்ளார்.